×

மக்களவை தேர்தலையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 60 ரவுடிகள் கைது

திருவாரூர்: மக்களவை தேர்தலையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரவுடி பட்டியலில் உள்ள 60 பேரும் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் திருவாரூர் மாவட்டத்தில் 24 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.  

மக்களவை தேர்தல் தேதியை நேற்று மாலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது .காவல் துறை சார்பில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு வாகனங்களில் ஆவணங்களின்றி பணம், பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா, வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் கொண்டு செல்லப்படுகிறதா என்பதை கண்டறிய மாவட்ட எல்லைகள், முக்கிய செக்போஸ்ட்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறா வண்ணம் திருவாரூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடிதடி, கட்டபஞ்சயாத்து உட்பட பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடைய ரவுடிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் மாவட்ட எஸ்பி மயில்வாகனன் உத்தரவின் பேரில் போலீசார் மாவட்டம் முழுவதும் இன்று காலை முதல் ரவுடிகளை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை ரவுடி பட்டியலில் உள்ள சுமார் 60க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tiruvarur district ,elections ,Lok Sabha , Lok Sabha, Tiruvarur, Rowdy, arrested, checkpost
× RELATED மக்களவைத் தேர்தல்: உண்மையான...