×

மக்களவை தேர்தலில் விஜயகாந்த் அனைத்து தொகுதிகளிலும் நேரடியாக பிரசாரம் மேற்கொள்வார்: விஜயபிரபாகரன்

பெரம்பலூர்: மக்களவை தேர்தலில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அனைத்து தொகுதிகளிலும் நேரடியாக பிரசாரம் மேற்கொள்வார் என்று விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார். பெரம்பலூர் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் கட்சி கொடியேற்று விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. குன்னம் அருகே உள்ள செங்குணம், சிறுகுடல், கீழப்புலியூர், பீல் வாடி, எழுமூர், சித்தளி உள்ளிட்ட கிராமங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் துரைகாமராஜ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் மலர்மன்னன் முன்னிலை வகித்தார். அதனைத்தொடர்ந்து சித்தளியில் நடைபெற்ற கட்சி உறுப்பினரின் இல்ல விழாவில் விஜயபிரபாகரன் கலந்து கொண்டு பேசினார்.

தே.மு.தி.க.வை அழிக்க நினைப்பவர்கள் இந்த தேர்தலுடன் அழிந்து விடுவார்கள் என கூறினார். தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் தே.மு.தி.க. குறித்து பேசியதால், தே.மு.தி.க.வின் திருஷ்டி அழிக்கப்பட்டுவிட்டது எனவும் தெரிவித்தார். தற்போது தே.மு.தி.க. பாசிட்டிவ் எனர்ஜியாக வளர்ந்து வருகிறது. மக்களவை தேர்தலில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அனைத்து தொகுதிகளிலும் நேரடியாக பிரசாரம் மேற்கொள்வார் என பேசினார். முன்னதாக எழுமூரில் கட்சி கொடியினை ஏற்றிய விஜயபிரபாகரன், இந்த தேர்தலில் நாம் யார்? என்பதை விஜயகாந்த் வழியில் செயல்பட்டு நிரூபிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார். தேர்தலில் நம்முடைய நோக்கம் வெற்றியடைய நாம் உறுதியேற்க வேண்டும் என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vijayakanth ,constituencies ,election ,Lok Sabha , Vijayakanth,campaign,directly,constituencies,Lok Sabha election,Vijayaprabakaran
× RELATED மக்களவைத் தேர்தல்: 57 தொகுதிகளுக்கு இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது