×

திண்டுக்கல் அருகே கண்காட்சி கவர்ந்தது கிளிமூக்கு: மிரட்டியது கருங்கீரி

திண்டுக்கல், : திண்டுக்கல் அருகே குட்டியபட்டியில் உலக அசில் ஒருங்கிணைப்பு மற்றும் சேவல் வளர்ப்பு நண்பர்கள் சார்பில் 5ம் ஆண்டு சேவல் கண்காட்சி நேற்று நடைபெற்றது. இதில் கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து மயில் வகை சேவல், கிளிமூக்கு, உச்சிப்பூ, கருங்கீரி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வகையான சேவல்கள் இடம் பெற்றன.

கண்காட்சியில் சேவல் குஞ்சுகள் ரூ.5 ஆயிரம் முதல் விற்பனை செய்யப்பட்டன. இதில் சிறந்த 100 சேவல்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் 30 சேவல்களுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன. சேவல் வளர்ப்போர் கூறுகையில், ‘‘முதலாம் ஆண்டு சேவல் கண்காட்சியில் 100 சேவல்களே இடம்பெற்றன. இந்த ஆண்டு 500க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான சேவல்கள் இடம் பெற்றன. அழிந்து வரும் சேவல்களின் இனத்தை காக்கும் விதமாகவே இந்த கண்காட்சி நடைபெறுகிறது’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : exhibition ,Dindigul Climax ,blacksmith , blacksmith,Dindigul ,exhibition
× RELATED ஜம்மு-காஷ்மீா் துலிப் மலர் கண்காட்சி புகைப்படங்களின் தொகுப்பு..!!