×

வில்லிவாக்கம், கண்ணகி நகரில் அதிமுகவினர் பணப்பட்டுவாடா: திமுகவினர் மடக்கி பிடித்தனர்

பெரம்பூர்: வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியின் பல்வேறு இடங்களில் இரவில் மின் தடை ஏற்படுத்தி, அதிமுகவினர் பணப் பட்டுவாடாவில் ஈடுபட்டு வருவதாக புகார்எழுந்துள்ளது. நேற்று காலை அயனாவரம், 98வது வட்டத்துக்கு உட்பட்ட அண்ணா தெரு பகுதியில் அதிமுகவினர் வீடு வீடாக சென்று, வாக்காளர் அடையாள அட்டையை சரிபார்த்து, பணம் வழங்கினர்.தகவலறிந்து திமுக பகுதி செயலாளர் வாசு உள்பட 5 பேர் சம்பவ இடத்துக்கு சென்று, பணப் பட்டுவாடாவில் ஈடுபட்ட அதிமுகவினரை சுற்றி வளைத்து பிடிக்க முற்பட்டனர். அப்போது அதிமுகவை சேர்ந்த பாஸ்கர் ராவ் ₹30 ஆயிரத்தை கீழே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தார். அதை அயனாவரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்த வாசு, பணப் பட்டுவாடாவில் ஈடுபட்ட அதிமுகவினர்மீது புகார் அளித்துள்ளார்.இதேபோல் அயனாவரம், தங்கப்பா தெருவில் வீடு வீடாக சென்று அதிமுக வட்ட பிரதிநிதி ரமேஷ், மக்களுக்கு பணம் கொடுத்துள்ளார். தகவலறிந்தஅயனாவரம் போலீசார் அவரை மடக்கி பிடித்து 19 ஆயிரம் பறிமுதல் செய்தனர்.* துரைப்பாக்கம் கண்ணகி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் நேற்று  அதிமுகவினர் வீடுவீடாக சென்று, வாக்காளர்களுக்கு தலா 500 விநியோகித்தனர். தகவலறிந்த திமுகவினர் சம்பவ இடத்திற்கு  சென்று வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த அதிமுகவினர் 2  பேரை பிடிக்க முயன்றனர். அப்போது ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து தனது நாயை அவிழ்த்துவிட்டார்.  திமுகவை சேர்ந்த பிரகாஷ், அவரை பிடிக்க முயன்றபோது அந்த நாய் கடித்தது. ஆனாலும் பிரகாஷ், அவடமிருந்து,யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்ற விவரங்கள்  அடங்கிய பேப்பர் மற்றும் 1500 ப பறிமுதல் செய்து கண்ணகி நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்….

The post வில்லிவாக்கம், கண்ணகி நகரில் அதிமுகவினர் பணப்பட்டுவாடா: திமுகவினர் மடக்கி பிடித்தனர் appeared first on Dinakaran.

Tags : Villiwakam ,Ganagi ,Perampur ,Villiwakam Assembly Assembly ,Vilantism ,Kannagi ,Dinakaran ,
× RELATED பள்ளிக்கூட வாசலில் வாகனத்தை...