×

எங்கள் அண்ணனின் இறப்பு மருத்துவக் கொலை குருவை ஸ்லோ பாய்சன் கொடுத்து கொன்று விட்டனர்

* குருவின் சகோதரி, மகன், தாய் கண்ணீர்மல்க பேட்டி

சென்னை: எங்களுடைய அண்ணனின் இறப்பு இயற்கையான சாவு இல்லை ஸ்லோ பாய்சன் கொடுத்து கொன்று விட்டனர். அதாவது மருத்துவக் கொலை என்று தான் சொல்ல வேண்டும் என்று குருவின் சகோதரி, மகன், தாய் கண்ணீர் மல்க கூறினர். காடுவெட்டி குருவின் சகோதரிகள் மீனாட்சி, சந்திரகுமாரி மகன் கனல்அரசன், தாய் கல்யாணி ஆகியோர் நேற்று கூட்டாக சென்னையில் பத்திரிகையாளரை சந்தித்தனர். பின்னர் அவர்கள் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது: எங்களுக்கு நியாயம் வேண்டும் எங்களுடைய அண்ணன் 35 வருஷம் சமுதாயத்திற்காக வாழ்ந்தவர் கடைசியில் முறையான சிகிச்சை இல்லாமல் இறந்து போனார். அதன் பிறகு எங்களுடைய குடும்பம் கஷ்டப்படுகிறது. இந்நிலையில் எங்களுடைய அண்ணன் மகளை கடத்துவதற்கு முயற்சி செய்தனர். அதனால் அவசரமாக அழைத்து சென்று திருமணம் செய்து வைத்தோம். அதன்பிறகு ஊருக்குள் எங்களை விடாமல் அடித்து துரத்திவிட்டனர். என்னுடைய தாயை அடித்து தாக்கினார்கள். அதன்பிறகு என்னுடைய அண்ணன் பிறந்தநாள் வந்த போது அதை ெகாண்டாட சென்றோம். அப்போது 144 தடை உத்தரவு பெற்று அவருக்கு மாலை வைத்து அஞ்சலி செலுத்த விடாமல் தடுத்தனர். இதற்கிடையில் கத்தியை எடுத்து வெட்டப்போனதாக கொலைமிரட்டல் வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது ஜாமீனில் தான் இருக்கிறோம். இந்நிலையில் திரும்பவும் என் அம்மா மற்றும் தங்கை, என்னுடைய அண்ணன் மகனையும் ஏதாவது பண்ண வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதையெல்லாம் செய்து விட்டு அமைதியாக இருங்கள் கடனை முழுவதும் செலுத்துகிறோம் என்று எங்களுடைய உறவினரை வைத்து பேரம் பேசுகின்றனர்.பாமக தற்போது அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கிறார்கள் 10 கோரிக்கைகள் வைத்திருக்கிறார்கள் எங்களுடைய சமுதாயத்திற்கு ஏதாவது கோரிக்கை வைத்திருக்கிறார்களா.

ராமதாஸ் தரப்பினர் 90 சதவீதம் கட்சியை  அவர்களே காலி பண்ணிவிட்டார்கள் மீதி 10 சதவீதம் தான் உள்ளது அதை தற்போது உள்ள இளைஞர்கள் அனைவரும் புரட்சியை ஏற்படுத்துவார்கள். காடுவெட்டி குரு இல்லாமல் பாமக இல்லை, பாமக இல்லாமல் காடு ெவட்டி குரு இல்லை இது உண்மை தான் காடுவெட்டி குருபோல் ஆயிரம் காடுவெட்டி குருவை உருவாக்கும் முடியும் என்கிறார்கள் அப்படி சொல்பவர்கள் உருவாக்கி கொள்ள வேண்டியது தானே. என்னுடைய அப்பாவை மற்ற கட்சியை விமர்சிக்க சொல்கிறார்கள் ஆனால் அவர்களுடன் விருந்து சாப்பிட்டு வருகின்றனர். இப்போது 80 வகையான உணவு பரிமாறப்படுகிறது. ஏன் பாமக நிர்வாகிகளுக்கு முக்கியதுவம் கொடுக்காமல் பணம், பதவிக்காக 80 வகை விருந்து வைத்து விட்டு எல்லாமே நாங்கள் தான் என்கின்றனர். குரு இறந்த பிறகு மக்களிடம் பேரு வாங்க வேண்டும் என்று கடனை கட்டுவதாக ஏற்றுக் கொண்டார்கள். அதன்பிறகு அவர்களை சந்திக்க சென்ற போது நாங்களே ஆயிரம் தென்னை மரம் வைத்திருக்கிறோம். அதை வைத்து தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்று அசிங்கப்படுத்தி அனுப்பி விட்டார்கள். தற்போது உங்களுக்கு என்ன வேண்டும் என்று பேரம் பேசுகின்றனர் நீங்கள் எதுவும் பேசக்கூடாது என்று கூறுகின்றனர். மேலும் ஊரில் இருந்து வெளியில் போனால் கூட ஊரில் சொல்லி விட்டு தான் போக வேண்டும் என்று சொல்கிறார்கள்.  

குரு 2011ம் ஆண்டு பிறகு எப்படி அரசியலில் ஈடுபட்டார் என்பது தெரியும். எங்களுடைய அண்ணனின் இறப்பு இயற்கையான சாவு இல்லை ஸ்லோ பாய்சன் கொடுத்து தான் கொன்றுவிட்டனர். அதாவது மருத்துவக் கொலை என்று தான் சொல்ல வேண்டும். மேலும் 2011ம் ஆண்டு ராமதாஸ் வீட்டில் ஒரு விருந்து வைத்திருந்தார்கள் அப்போது அவர் போய் சாப்பிட்டு விட்டு வந்தவுடன் வந்து சொன்னார்கள். அப்போது அவருடைய மனைவி சாப்பாடு வைத்தார்கள் எனக்கு மட்டும் தான் வைத்தார்கள் யாருக்கும் வைக்கவில்லை அதை கவனித்தேன் அதன்பிறகு ெநஞ்சு எரிய ஆரம்பித்தது என்று சொன்னார். அதன்பிறகு தான் உடல்நிலை சரியில்லாமல் போனது. பாமகவில் பாதிக்கப்பட்ட நிர்வாகிகள், சமுதாய மக்கள் அனைவரும் எங்களை ஆதரிக்கின்றனர். நாடாளுமன்ற தேர்தலில் 7 தொகுதிகளில் எங்களுடைய ஆதரவாளர்கள் குழுவாக அமைக்கப்பட்டுள்ளது அவர்கள் பாமகவை தோற்கடிக்க அனைத்து வேலைகளையும் செய்து கொண்டு இருக்கின்றனர். என்னுடைய பாட்டி தேர்தலில் நிற்பது குறித்து அவர் உடலை பொறுத்து முடிவு எடுக்கப்படும். என்னுடைய அம்மா பாமகவால் எனக்கு பாதுகாப்பு இல்லை அதனால் தான் பாமக தலைமையிடம் பேசிக்கொண்டு இருக்கிறேன் என்கிறார். இப்போது சூழ்நிலை காரணமாக வழக்கு கொடுக்க முடியவில்லை எதிர்த்தால் அழியக்கூடிய நிலையில் இருக்கிறோம். குருவை மருத்துவமனையில் சூழ்நிலை கைதியாக தான் வைத்திருந்தார்கள் அன்று இரவு அவருக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டது.

அவருக்கு ஆபரேசன் பண்ணியிருந்தால் சரி செய்திருக்கலாம் அங்கு வைத்து எல்லாம் ரெடி பண்ணுகிறோம் என்று சொன்னார்கள். அதன்பிறகு அங்கு வைத்து எனக்கும் ராமதாசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பிறகு அவர்கள் மேல் சந்தேகம் ஏற்பட்டு வௌியில் இருந்து மருத்துவரை அழைத்து வந்து பார்த்தோம். அதன்பிறகு குடும்பத்தில் இருந்து அனைவரும் சேர்ந்து மீட்டிங் போட்டார்கள் அப்போது குருவிற்கு ெசலவு பண்ணுவது வீண் அவருக்கு ஏன் செலவு பண்ண வேண்டும் என்று அன்புமணி மற்றும் அவருடைய உறவினர் டாக்டரும் கூறும் போது நான் அழுக ஆரம்பித்து விட்டேன். அப்போது அங்கு பணியில் இருந்த மற்றொரு டாக்டர் அழாதீர்கள் கடைசிவரை போராடி பார்ப்போம் என்று கூறினார். வன்னியர் சங்கத்தில் சொத்து வாங்கியிருக்கிறார்களா? என்று தெரியாது அன்புமணி வளர்ச்சிக்கு குரு இடஞ்சலாக இருக்கிறார் அன்புமணிக்கு குருவை பிடிக்காது.

இதற்கிடையில் போன நாடாளுமன்ற தேர்தலின் போது தி.நகர் கட்சி அலுவலகத்துக்கு சென்ற போது நீ வர வேண்டாம் வந்தால் சாதிக்கட்சி என்று கெட்ட பெயர் ஏற்படும் என்று கூறியுள்ளனர் அப்போது வீட்டிற்கு வந்து அழுதார். அதன்பிறகு மறுபடியும் வந்து பிரச்சாரம் பண்ண சொன்னார்கள். மருத்துவமனையில் இருக்கும் போது  அவருக்கு டியூப் போட வேண்டாம் போட்டால் நினைவு இருக்காது என்றேன் ஆனால் அவர்கள் டியூப் போட்டால் நினைவு இருக்கும் என்று கூறினார்கள். அப்போது அவர் ராமதாசை பார்த்து இந்த உயிர் தானே வேண்டும் எடுத்துக் கொள் என்று முகத்தை திருப்பிக் கொண்டு அழுஆரம்பித்து விட்டார் என்றார்.  வன்னியர் பொதுநல வாரியம் கொண்டு வந்து அறக்கட்டளை சொத்துக்களை இதன் கீழ் கொண்டு வரவேண்டும்.  எங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதால் எங்கள் குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு கூறினர். ராமதாசை சந்திக்க சென்ற போது நாங்களே ஆயிரம் தென்னை மரம் வைத்திருக்கிறோம். அதை வைத்து தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்று அசிங்கப்படுத்தி அனுப்பி விட்டார்கள்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Slaughterhouse ,brother ,Slow Boyson , guru,killed
× RELATED அடிச்சாலும், புடிச்சாலும் நீயும்,...