எடப்பாடிக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி செம ஐஸ் வாய் அசைத்தால் வரலாறு... நாவசைத்தால் புறநானூறு...

சாத்தூர்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாய் அசைத்தால் வரலாறு; நாவசைத்தால் புறநானூறு, இதுதான் விதி என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அதிரடி பேட்டி அளித்துள்ளார். விருதுநகர் மாவட்டம், இருக்கன்குடியில்  அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்ய, மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கும்  அதிமுக அரசால் மட்டுமே முடியும். ஏழை, எளிய மக்கள் பயன்பெறவே, அதிமுக - பாஜ கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. தேர்தல்  களத்தில் மக்கள் நீதி மய்யம் கிடையாது.  எடப்பாடி வாய் அசைத்தால் வரலாறு;  நாவசைத்தால் அது புறநானூறு. இதுதான் விதி. கடவுள் என்னும் முதலாளி கண்டு எடுத்த தொழிலாளி எடப்பாடி. அவர் சொன்னா சொன்னதுதான். அவர் ஒரு தடவை சொன்னா; நூறு தடவை சொன்ன மாதிரி. டிடிவி தினகரனின் அமமுக  கவலைக்கிடமாக உள்ளது.

இரண்டு மாதத்தில் சிறையில் இருந்து  சசிகலா வெளிவருவார் என அமமுகவினர் கூறுகின்றனர். பெண் என்ற முறையில்,  அவர் சிறையில் இருந்து வெளிவருவது எங்களுக்கு மகிழ்ச்சியே.   இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சிவகாசியில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தேமுதிக எங்கள் கூட்டணிக்கு வராவிட்டாலும், அதிமுகவுக்கு பாதிப்பு கிடையாது. நாடாளுமன்ற தேர்தல் களத்தில் திமுக, அதிமுகவுக்குதான் போட்டி. மீண்டும் பாஜ ஆட்சி அமைத்தால், அமைச்சரவையில் அதிமுக இடம் கேட்கும். தற்போது நடிகர்கள் வியாபார நோக்குடன் அரசியலுக்கு வருகின்றனர். ஆனால், ரஜினிகாந்த் சாணக்கியத்தனமாக, அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்டார்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sima Eye Mouth ,Rajendra Palarigama ,suburbs ,nanny , Minister Rajendra balaji
× RELATED உள்நோக்கத்துடன் செயல்படும் தேர்தல்...