இடைத்தேர்தலில் போட்டியில்லை: ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி

சென்னை: தமிழக சட்டமன்றத்துக்கான இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.சென்னை விமான நிலையத்தில் ரஜினி ேநற்று அளித்த பேட்டி:‘தமிழக சட்டமன்ற தேர்தல்தான் இலக்கு என்று கூறியிருந்தீர்கள். தற்போது நாடாளுமன்ற தேர்தலுடன், காலியாக உள்ள 21 தமிழக சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் வந்தால், அந்த இடங்களில் போட்டியிடுவீர்களா?இல்லை. போட்டியிட மாட்டேன்.உங்களின் அடுத்த இலக்கு என்ன? கட்சி தொடங்குவது குறித்து எப்போது அறிவிப்பு வெளியாகும்?ஸாரி… நான் இப்போது உங்களிடம் பேசுவது போல் இல்லை.

தண்ணீர் பிரச்னையை தீர்க்கும் கட்சிக்குத்தான் ஓட்டு அளிக்க வேண்டும் என ஏற்கனவே அறிக்கை வெளியிட்டு இருந்தீர்கள். நீங்கள் மாநில கட்சியை குறிப்பிடுகிறீர்களா? தேசிய கட்சியை குறிப்பிடுகிறீர்களா?இரண்டு கட்சிகளையும் சேர்த்துதான் கூறுகிறேன்.
இவ்வாறு சொல்லிவிட்டு, ஹா… ஹா… என்று சிரித்தபடி ரஜினிகாந்த் காரில் ஏறி வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED தண்ணீர் பிரச்சனையை தீர்க்க அரசுடன் இணைந்து செயல்பட தயார்: கனிமொழி பேட்டி