×

குமணன்சாவடியில் உள்ள ஊத்துக்காடு எல்லையம்மன் கோயில் கும்பாபிஷேக விழா: 2007 இளநீர் அபிஷேகம் செய்து வழிபாடு

பூந்தமல்லி: பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ஊத்துக்காடு எல்லையம்மன் கோயிலின் 8ம் ஆண்டு கும்பாபிஷேக விழாவை முன்னிட்டும், மழை வேண்டியும் 2007 இளநீர் அபிஷேகம்   நடைபெற்றது.கோடை காலம் தொடங்கி விட்டதால் மழை இல்லாமல் நீர்நிலைகள் வறண்டு வருகின்றன. இதனால் தமிழகம் முழுவதும் மழை பெய்து தண்ணீர் பஞ்சம் இல்லாமல் செழிக்க வேண்டி பூந்தமல்லி குமணன்சாவடியில் உள்ள  பழமையான ஊத்துக்காடு எல்லையம்மனுக்கு பக்தர்களால் இளநீர் அபிஷேகம் நேற்று செய்யப்பட்டது.

இதையொட்டி காலை 6 மணிக்கு கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து பூந்தமல்லி அருள்மிகு திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜபெருமாள் கோயிலில் இருந்து 2007 இளநீர்களுடன்  பக்தர்கள் ஊர்வலமாக 3 கி.மீ தூரம் சாலையில் ஊர்வலமாக நடந்து வந்து ஊத்துக்காடு எல்லை அம்மனுக்கு சிறப்பு இளநீர் அபிஷேகம் செய்தனர். இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், விஷேச பூஜையும் நடைபெற்றது. 5 ஆயிரம் பேருக்கு அன்னதானமும் நடைபெற்றது. இரவு அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை  கோயில் தர்மகர்த்தா பூவை ஞானம் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kumbabisheka Festival Celebrations ,Kumanasavady , Kumanaswadi,Kumbhabhishekam ,2007
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...