×

தனியார் பள்ளிகளில் கோடை கால சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

கோபி:  ஈரோடு மாவட்டம் கோபியில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: 1, 6, 9, 11ம் வகுப்பு பாடத் திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டது. மற்ற வகுப்புகளுக்கு ஒரே ஆண்டில் பாடத்திட்டம் மாற்றியமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தாண்டு அனைத்து வகுப்புகளுக்கும் பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்படும். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க இரண்டு ஆண்டு தேவைப்படும் என்ற நிலையில் தமிழகத்தில் 8 மாதத்திலேயே பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 800 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டதாக வரும் தகவல் பொய்யானவை. எந்த காலத்திலும் அரசுப் பள்ளிகளை மூடும் எண்ணமில்ைல.

தனியார் பள்ளிகளைக் காட்டிலும் மிகச் சிறப்பான சீருடைகள் இந்தாண்டும் வழங்கப்படும். கோடை விடுமுறையில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கோடை கால சிறப்பு வகுப்புகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பெற்றோர்கள் தங்கள் மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கான நீட் பயிற்சிக்கு செல்ல வேண்டும் என விரும்புகின்றனர்.  சில பள்ளிகளில் முன் கதவை மூடிவிட்டு பின் கதவு வழியாக மாணவனை அழைத்து சென்று பாடம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து தகவல் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Summer action ,Chengottian ,schools ,interview , private school, Minister sengottaiyan
× RELATED குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பல...