×

அபிநந்தனுக்கு விமானப்படை பாராட்டு வேட்டைக்காரனை வேட்டையாடினாய்...

புதுடெல்லி: ‘விங் கமாண்டர் அபிநந்தன் வேட்டைக்காரனை வேட்டையாடியவர்’ என கவிதை மூலமாக விமானப்படை பாராட்டியுள்ளது. புல்வாமா தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, கடந்த 26ம் தேதி பாகிஸ்தானின் பாலகோட்டில் செயல்பட்டு வந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை குண்டு வீசி அழித்தது. இதையடுத்து, பாகிஸ்தான் போர் விமானங்கள் இந்திய வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தன.  இந்திய விமானப்படையை சேர்ந்த விங் கமாண்டர் அபிநந்தன் மிக்-21 விமானத்தில் பாகிஸ்தானின் விமானத்தை விரட்டி சென்றார். அந்நாட்டுக்கு சொந்தமான எப்-16 விமானத்தை சுட்டு வீழ்த்தினார். பின்னர் பாகிஸ்தானிடம் அவர் சிக்கினாலும் சர்வதேச நிர்ப்பந்தத்தால் விடுவிக்கப்பட்டார்.

 பாகிஸ்தானுக்குள் சென்று அந்நாட்டு விமானத்தை சுட்டு வீழ்த்திய அபிநந்தனுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்திய விமானப்படையும் அபிநந்தனுக்கு பாராட்டு தெரிவித்தது. விமானப்படை தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில், அபிநந்தனை பாராட்டி எழுதப்பட்ட கவிதை வெளியிடப்பட்டுள்ளது. பிபின் அல்ஹாபாதி என்பவர் இந்தியில் இந்த கவிதையை எழுதியுள்ளார். அதில், ‘விமானி அபிநந்தன் செய்த செயல் எல்லாருக்கும் சாத்தியமில்லை. அவர் வேடனை வேட்டையாடியவர்’ என்று கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : hunt ,Abhinandan , Air Force, Abhinanthan,
× RELATED கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு...