×

கூட்டணி சேர்ந்தபின் கிடப்பில் போடப்பட்ட ரெய்டு நடவடிக்கை: புகழேந்தி, அமமுக செய்தி தொடர்பாளர்

நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வைப்பதற்கு அதிமுகவினருக்கு ஒரு பயத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக மட்டுமே அதிமுக அமைச்சர்களின் வீடுகளில் பல்வேறு ரெய்டுகள் நடத்தப்பட்டது. அதனாலேயே தற்போது  முதல்வரும், துணைமுதல்வரும், அமைச்சர்களும் பயந்து நடுங்குகிறார்கள். கூட்டணி அமைந்த பின்னர் தற்போது ரெய்டு குறித்த அடுத்தகட்ட நடவடிக்கைகள் எல்லாம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.இதேபோல், மத்தியில்  ஆட்சியாளர்கள் கொடுக்கும் அழுத்தத்தின் காரணமாகவே விஜயகாந்தை கூட்டணிக்காக பார்க்க ஓடுகிறார்கள். அதிமுகவில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை கூட மத்தியில் உள்ள மோடியின்  ஒப்புதல் கொடுத்தால் மட்டும் தான் வேட்பாளர் பட்டியலையே வெளியிடுவார்கள். இதை மீறி அதிமுகவினர் செயல்பட்டால் உடனே அவர்களின் வீடுகளில் ரெய்டு விடப்படும். ரெய்டுக்காக ஆளும் கட்சியினர் பயந்து  நடுங்குகின்றார்கள்.ஜெயலலிதாவை குற்றவாளியாக நிறுத்தி வேடிக்கை பார்த்தவர்கள் பாமகவினர். அவர்களுடனே இவர்கள் கூட்டணி வைத்திருக்கிறார்கள். இதை என்னவென்று சொல்வது? மத்திய அரசை மீறி எடப்பாடி பழனிசாமி எந்த முடிவு  எடுக்க போனாலும் எடப்பாடி பழனிசாமிக்கு சொந்தமான 600 இடங்களிலும் ரெய்டு விடப்படும். அவருக்கு சொந்தமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து இடங்களிலும் ரெய்டு நடைபெறும். இதற்கு பயந்துதான் எடப்பாடி  பழனிசாமி மத்திய அரசு சொல்வதெற்கெல்லாம் ஆடுகிறார்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தமிழக அமைச்சர்கள் 33 பேர் கண்டிப்பாக சிறைக்கு செல்வார்கள். அதற்கான ஆதாரங்கள் அனைத்தும் என்னிடம் உள்ளது. மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட உடன் 33 அமைச்சர்கள்  யாரும் தப்ப முடியாது. அவர்களின் பாஸ்போர்ட்களை உடனடியாக முடக்க வேண்டும். ஆட்சிமாற்றத்திற்கு பின்னர் அவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிசென்றுவிடக் கூடாது. இதேபோல், அவர்களின் உறவினர்களின்  பாஸ்போர்ட்களையும் முடக்க வேண்டும். அவர்கள் மீதான விசாரணையை தீவிரப்படுத்தி, உரிய தண்டனை வழங்க வேண்டும். கடந்த தேர்தலில் நோட்டாவுடன் பாஜக போட்டியிட்டது. ஆனால், இந்த தேர்தலில் கண்டிப்பாக கடந்த தேர்தலில் வாங்கிய ஓட்டை விட இப்போது ஓட்டு குறையும். திராவிட இயக்கங்களின் ஒட்டுமொத்த உயிரோட்டம் தான்  தமிழகம். இந்த கூட்டணி என்பது எப்படியாவது ஓட்டுவாங்கிவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். அது நடக்காது. பாஜகவுடன் கூட்டணி சேர்ந்திருப்பதால் கண்டிப்பாக நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு மிகப்பெரிய  தோல்வி ஏற்படும். அதிமுகவினர் டெபாசிட் கூட கிடைக்காமல் தோல்வியடைவார்கள். டெபாசிட்டை தக்கவைக்க முடியாது. இந்த போட்டி திமுகவிற்கும், அமமுகவிற்கும் மட்டும் தான்.

திராவிட கட்சிகளின் காலை பிடிக்காமல் அரசியலில் கரை சேர முடியாது என்பதை பாஜக உணர்ந்திருக்கிறது. கடந்த தேர்தலின் போது நான் மேடைக்கு மேடை விளையாட்டு தனமாக என்னுடைய வீட்டில் ரெய்டு செய்யுங்கள்  என்று கூறினேன். இதற்கு பிறகு அதிமுக மதுசூதனன் மற்றும் பாஜகவை சேர்ந்த தலைவர் ஒருவர் புகழேந்தி வீட்டில் ரெய்டு செய்யுங்கள் என்று கூறினர். இதற்கு பிறகு திட்டமிட்டு என்னுடைய வீட்டில் ரெய்டு நடத்தினார்கள்.  அப்போது என் வீட்டில் இருந்த ₹23 ஆயிரத்தை தான் எடுத்தார்கள். வேறு எதுவும் கிடைக்கவில்லை. தற்போது, பாஜகவின் அனுமதி இல்லாமல் பழனிச்சாமியோ, பன்னீர் செல்வமோ எந்த ஒரு முடிவு எடுத்தாலும்  நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் ரெய்டு நடவடிக்கை மீண்டும் தொடரும்.கூட்டணி அமைந்த
பின்னர் தற்போது ரெய்டு குறித்த அடுத்தகட்ட நடவடிக்கைகள் எல்லாம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Coalition ,Amyam , joi, Vandana, Amyam
× RELATED 100க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி...