×

எங்களை கண்டுகொள்ளாததால் தேர்தலில் போட்டி: எஸ்சி, எஸ்டி அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு

சென்னை: எங்கள் கோரிக்கைகளை கண்டுக்கொள்ளாததால் 40 நாடாளுமன்ற, 21 சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவோம் என மத்திய, மாநில எஸ்சி மற்றும் எஸ்டி அரசு ஊழியர்கள், மக்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
சென்னையில் அக்கூட்டமைப்பின் அரசியல் பிரிவு துணைத்தலைவர் சுப்பிரமணி உள்ளிட்டோர் அளித்த பேட்டி: எஸ்சி, எஸ்டி மக்களுக்கு இடஒதுக்கீடு முறையில் 27,614 அரசு  பணியிடங்களை சிறப்பு தேர்வு நடத்தி பணி வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டும் தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை.

எனவே வரும் 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும், 21 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்துள்ளோம். அதற்காக வரும் 24ம் தேதி திருச்சியில் நடக்கும் மாநாட்டில் வேட்பாளர்களிடம் மனு பெறுகிறோம். தமிழ்நாட்டில் சமீபகாலமாக பிற மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்தை சேர்ந்த இளைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே தமிழகத்தில் தமிழர்களுக்கு மட்டுமே வேலை வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Competition ,election ,SC ,Government Staff Announcement ,SD , election, SC, SD Government Staff Announcement
× RELATED வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள...