×

கொடைக்கானலில் பச்சை பட்டாணி விளைச்சல் அமோகம்: விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி

கொடைக்கானல்: கொடைக்கானலில் பச்சை பட்டாணி நல்ல விளைச்சல் கண்டிருப்பதுடன் விலையும் அதிகம் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான அட்டுவம்பட்டி, வில்பட்டி, மாட்டுப்பட்டி, அடிசரை, பள்ளங்கி உள்ளிட்ட பகுதிகளில் பச்சை பட்டாணி அதிகளவில் பயிரிடப்படுகின்றன. இப்பகுதியில் விளையும் பச்சை பட்டாணி அதிக சுவை கொண்டது. பனிக்காலங்களில் மட்டுமே விளையும் இப்பச்சை பட்டாணி கடந்த 2 மாதங்களில் மலைப்பகுதிகளில் நிலவி வந்த கடும் பனி காரணமாக அதிகளவில் விளைச்சல் கண்டுள்ளது. தற்போது பச்சை பட்டாணி அறுவடை தீவிரமாக நடந்து வருகிறது. மதுரை மார்க்கெட்டில் ஒரு கிலோ பச்சை பட்டாணி ரூ.32 முதல் ரூ.40 வரை விலை கிடைக்கிறது. விளைச்சல் மட்டுமின்றி விலையும் அதிகமாக கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kodaikanal ,price hike , Kodaikanal, green peas, yield, price, farmers
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்