×

ராஜேந்திரபாலாஜி கிண்டல் எங்ககூட சேராததால் தான் தேமுதிகவுக்கு டெபாசிட் போச்சு

சிவகாசி: கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்காததால்தான், தேமுதிக டெபாசிட் இழந்தது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.  விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் ஆவின் பால் விற்பனை நிலையத்தை நேற்று திறந்து வைத்த அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது,  கூட்டணியை பலப்படுத்தவும், வெற்றி மேல் வெற்றி பெறவும் தொடர்ந்து தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி வைத்ததால்தான், விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவர் ஆனார். ஆனால் 2016ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்காமல், மக்கள் நலக்கூட்டணியில் சேர்ந்ததால்தான் தேமுதிக டெபாசிட் இழந்தது.

அதிமுக என்ற குதிரையில் யார் வேண்டுமானாலும் சவாரி செய்யலாம். அந்த குதிரையை நான்தான் தூக்கிக்கிட்டு செல்வேன் என்று சொல்லக்கூடாது. அதிமுக அமைத்துள்ள கூட்டணி தெய்வீக கூட்டணி. இந்திய இறையாண்மையை ஒற்றுமையை பாதுகாக்கக் கூடிய கூட்டணி. தமாகாவுடன் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது. தற்போதைய சூழ்நிலையில் ஜெயலலிதா இருந்திருந்தால் கூட பாஜவுடன்தான் கூட்டணி அமைத்திருப்பார். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து நல்ல தீர்ப்பை நாங்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rajendra Pazhikal Kandal , Rajendra balaji Kandal,deposit
× RELATED இந்திய மக்களுக்கு இந்த தேர்தல் வாழ்வா?...