×

3வது டி20 கிரிக்கெட் ஒரு ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி

கவுகாத்தி: இங்கிலாந்து பெண்கள் அணியுடனான டி20 கிரிக்கெட் தொடரை ஏற்கனவே இழந்த இந்தியா 3வது போட்டியிலும் இந்தியா ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்றது. இந்த ஒட்டுமொத்த ேதால்விகளால் டி20 தொடரில் இந்தியாவை வழித்து வாரி வெளியில் கொட்டியது இங்கிலாந்து. இங்கிலாந்து பெண்கள் அணி  3 ஒருநாள், 3 டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இந்தியா- இங்கிலாந்து இடையிலான டி20  போட்டிகள் அனைத்தும் கவுகாத்தியில் நடைபெற்றது.  டி20 தொடரின் முதல் ேபாட்டியில்  இங்கிலாந்து 41 ரன்கள் வித்தியாசத்திலும்,  2வது டி20 போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியாவை தோற்கடித்து தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில் 3வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று கவுகாத்தியில் நடைப்பெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி  பேட்டிங்கை தேர்வு செய்தது.

தொடக்க ஆட்டக்கார்களாக களமிறங்கிய டேனியலி வியட், டம்மி பிமவுண்ட் ஆகியோர் ஆரம்பம் முதலே அடித்து விளையாடினர். அதனால் இங்கிலாந்து 7வது ஓவரில் 50 ரன்கள் எட்டியது. ஆனால் அடுத்த 3 ஓவர்களில்  4 ரன்கள் சேர்ப்பதற்குள் டேனியலி, நாடலியா,  டம்மி, அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.  அடுத்து வந்தவர்களும் இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வெளியேறினர். ஆனால் ஆமி ஜோன்ஸ் 21 பந்துகளில் 26 ரன்கள் எடுக்க 20 ஓவர் முடிவில் இங்கிலாந்து 6 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் அனுஜா பாட்டீல், ஹர்லீன் தியோல் ஆகியோர் 2 விக்கெட்களும், ஏக்தா, பூனம் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும்  வீழ்த்தினர்.
இந்திய அணி 120 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்றே எளிதான இலக்குடன் களமிறங்கியது. ஆனால் ஹர்லீன் 2வது ஓவரில் ஒரே ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். ஆனால் கடந்த 2 போட்டிகளில் சரியாக விளையாடாத கேப்டன் ஸ்மிரிதி மந்தனா மீண்டும் ஆட்டத்திறனை வெளிப்படுத்தினார். ஜெமீமா ரோட்ரிக்ஸ் 11 ரன்களில் வெளியேறினார். மிதாலி ராஜ் உள்ளே வந்தார்.

அதிரடியாக விளையாடிய மந்தனா 39 பந்துகளில் 58 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தபோது இந்தியா 13வது ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் எடுத்திருந்தது. அதனால்  கேள்விக்குறியான இந்தியாவின் வெற்றியை மிதாலி அதிரடி காட்டி ஆச்சர்யக்குறியாக்கினார். இடையில் தீப்தி சர்மா  ரன் அவுட்டானதால் வந்த பாரதி ஃபுலிமாலி இந்தியாவின் வெற்றியை கேள்வி குறியாக்கிவிட்டார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 3 ரன்கள் தேவை. கேத் கிராஸ் வீசிய அந்த ஓவரை பாரதி எதிர்க்கொண்டார். முதல் 3 பந்துகளில் ரன் ஏதும் கிடைக்கவில்லை. ஆனால் 4வது பந்தில் பாரதி ஆட்டமிழந்தார். அடுத்து 5வது பந்தை எதிர்க கொண்ட அனுஜாவும் ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் 3 ரன்கள் கிடைக்க ஒரு 4  அடித்தால் போதும் என்ற நிலை. அந்த பந்தை எதிர்க்கொண்ட ஷிகா பாண்டே ஒரு ரன் மட்டுமே எடுத்தார். அதனால் இந்தியா 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அந்த ஓவரில் ஒரு பந்தையாவது மிதாலி எதிர்க் கொண்டிருந்தால் இந்தியாவுக்கு ஆறுதல் வெற்றி கிடைத்திருக்கும். அந்த வாய்ப்பு கிடைக்காததால் இங்கிலாந்து ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.
 மிதாலி ராஜ் 32 பந்துகளில் 30ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.  கடைசி ஓவரில் ஒரு ரன் மட்டும் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்திய கேத் கிராஸ்  சிறந்த ஆட்டக்காரராக தேர்வு செய்யப்பட்டார்.
ஏற்கனவே ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்த இங்கிலாந்து  டி20 தொடரில் 3-0 என்ற கணக்கில் எல்லா போட்டிகளிலும் தோற்றதால் இந்தியாவை வழித்து வாரி வெளியில் ெகாட்டியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : T20 cricket ,run ,England , T20 cricket, England, India
× RELATED டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர் வரும் ஜூலை 5ம் தேதி தொடங்குகிறது!