×

மண்ணு, முட்டாள்னு அசிங்கமா திட்டிய அன்புமணி, ராமதாஸ் பக்கத்துல உட்கார வெட்கமா இல்ல...

சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான சரத்குமார் பேசியதாவது: அண்ணே பாஜகவை கடுமையாக தாக்கிவிட்டீர்கள் அதனால் உங்களுடன் கூட்டணி பேசவில்லை என்றனர். கூட்டணி பேசுவதற்காக நான் பாஜகவை தாக்கவில்லை. கொள்கை அடிப்படையில் தான் எதிர்க்கிறேன். நாளைக்கு நீங்க மாத்தி சொல்ல சொன்னால் என்னால் அதை மாத்திக்க முடியாது. அது ராமதாஸ்,  அன்புமணியால் மட்டும் தான் முடியும். ஜெயலலிதா படம் போட்ட பெட்டியை தூக்கி செல்பவர் எல்லாம் நிதியமைச்சர் ஆகிவிட முடியுமா?.  முட்டாள், மண்ணு அப்படின்னு சொன்னவன் பக்கத்தில் முதல்வர் உட்காருகிறார். அந்த பக்கம் ஓபிஎஸ் இருக்கிறார். நடுவில் ராமதாஸ் இருக்கிறார்.

என்ன ஒரு கொடுமை நாட்டில்?. சிந்தித்து பாருங்கள் பார்க்கிறதுக்கு, கேட்கிறதுக்கு கேவலமா இல்லையா?.
இது ஒரு அரசியலா? இப்படிப்பட்ட அரசியலை நாம் செய்ய வேண்டுமா? இல்லேன்னே 2 சீட் கொடுத்தா போய் நின்னுரலாம்ணே சொல்றீங்களா. எதுக்கு நிற்க வேண்டும். மக்கு, மண்ணு என்று சொன்னவர் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு என்னால் சிரிக்க முடியாது. அதுக்கு வேற ஆள் தான் வரணும். இப்படி எல்லாம் பேசியவர் பக்கத்தில் உட்காருவதற்கு உங்களுக்கு கூச்சமாக இல்லையா. வெட்கமாக இல்லையா. என்னை பற்றி பேசினால் எனக்கு எதிர் கொள்ள தெரியும். என்னை சீண்டி பார்க்க வேண்டாம். தாடி வச்ச மோடி பிரதமராக ஆகும் போது இந்த தாடி வச்ச சரத்குமார் ஆக கூடாதா என்று சொன்னேன். அது இப்போ டிரெண்டிங்கா போய்க்கிட்டு இருக்காம். என்னால் முடியும் என்று தான் நான் சொன்னேன். இவ்வாறு அவர் பேசினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Daddy ,ramadas ,house ,muttanunu akingamma diyamani , sand, foolish, anbumani, ramdoss
× RELATED பாமக போராட்டம் வெற்றி பெறுவது உறுதி: ராமதாஸ் கடிதம்