அஜிங்கிய ரஹானே நீக்கம் அஜித் அகர்கர் அதிரடி

மும்பை: சரியாக விளையாடாத  அஜிங்கிய ரஹானே சையத் முஷ்டாக் அலி டி20 தொடரின் சூப்பர் லீக் சுற்றில் இருந்து செலக்‌ஷன் கமிட்டி தலைவர் அஜித் அகர்கர் நீக்கியுள்ளார்.சையத் முஷ்டாக் அலி டி20 கோப்பை ேபாட்டியின் லீக் சுற்றுப் போட்டியில் மும்பை அணிக்காக அஜிங்கிய ரஹானே  விளையாடி வந்தார். லீக் சுற்றில் மொத்தம் 6  போட்டிகளில் விளையாடிய ரஹானே மொத்தம் 58 ரன்கள் மட்டுமே எடுத்தா–்ர. அதாவது ஒரு  போட்டிக்கு 10 ரன்கள் கூட எடுக்க வில்லை. இது இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிக்க வேண்டும் என்று ஆசையில் இருந்த ரஹானேவுக்கு மட்டுமல்ல, மும்பை அணிக்கும் ஏமாற்றமாக இருந்தது.

அதனால் அவரை அணியில் இருந்து நீக்குவதாக  மும்பை செலக்‌ஷன் கமிட்டி தலைவரும், முன்னாள் வீரருமான அஜித் அகர்கர் அறிவித்தள்ளார். இத்தனைக்கும் மும்பை அணி 6 லீக் போட்டிகளில் 5 போட்டிகளில் வென்று சூப்பர் லீக் சுற்றுக்கும் தகுதிப் பெற்றுள்ளது. இருந்தும் அகர்கர் அதிரடியாக ரஹானேவை நீக்கியுள்ளார். இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிக்க போராடி வரும் ரஹானேவுக்கு இது பெருத்த பின்னடைவாக கருதப்படுகிறது. விரைவில் தொடங்க உள்ள ஐபிஎல் போட்டியில்  ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ரஹானே விளையாட உள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ajitha Raheen Abhimakam ,Ajith Aggarar Action , Ajinkiya Rahane, Ajit Agarkar
× RELATED ஆயிரம் போட்டிகளில் விளையாடி பிரபல...