×

‘5 ஆண்டில் 3 முறை சர்ஜிக்கல் ஸ்டிரைக்’

மங்களூரு:  கர்நாடக மாநிலம் மங்களூருவில் நேற்று பாஜ சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்து. இதில் மாநில தலைவர் எடியூரப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசியதாவது:  கடந்த 1984ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் பாஜ இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதன் பின்னர் பாஜ தொண்டர்களின் அயராத உழைப்பாலும், மக்களின் நம்பிக்கையாலும் 2014ல் நடந்த மக்களவை தேர்தலில் தனி பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைத்தது. நாட்டிலேயே மிக பெரிய கட்சியாக பாஜ உருவெடுத்தது.

புல்வாமா தாக்குதலில் பிரதமர் நரேந்திர மோடி தக்க பதிலடி கொடுத்துள்ளார். இந்த தாக்குதலில் கர்நாடகாவை சேர்ந்த துணை ராணுவ வீரர்களும் வீர மரணமடைந்துள்ளனர். அவர்களின் தியாகம் வீண் போகாது.  ஏற்கனவே, பாகிஸ்தானில் புகுந்து 3 முறை சர்ஜிக்கல் ஸ்டிரை நடந்துள்ளது. இதில் 2 சர்ஜிக்கல் ஸ்டிரைக்கு பொதுமக்களுக்கு தெரியும். ஆனால், 3வது சர்ஜிக்கல் ஸ்டிரைக்கும் நடந்தது. அதுபற்றிய விவரத்தை இப்போது வெளியிட முடியாது. அதாவது கடந்த 5 ஆண்டில் நாங்கள் 3 முறை சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தி உள்ளோம்.நாட்டின் பாதுகாப்பு தான் மத்திய அரசின் லட்சியம் என்றார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Surgical Strike
× RELATED இந்தியாவில் பிரதமர் மோடி ஊழல் பள்ளியை...