×

வரும் கல்வியாண்டிலேயே 3, 4, 5, 8ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் : அரசாணை வெளியானது

சேலம்: தமிழகத்தில் 3, 4, 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம், வரும் கல்வி ஆண்டிலேயே அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அரசாணையை, அரசு முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: பள்ளிக்கல்வித்துறைக்கு  மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அனுப்பியுள்ள கடிதத்தில், “தமிழகத்தில் 2, 7, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்கள் தயாரிக்கும் பணி ஏப்ரல் இறுதியில் முடிவடையும். மேலும், அடுத்த கல்வியாண்டில் நடைமுறைப்படுத்த வேண்டிய 3, 4, 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்குரிய முதல் பருவத்திற்கான பாடபுத்தகங்களும், ஏப்ரல் இறுதிக்குள் வழங்க முடியும்.

தற்போது மேற்கண்ட வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு, புத்தக வடிவமைப்பு பணியில் உள்ளது. எனவே, 3, 4, 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டத்தை வரும் 2019-2020ம் கல்வியாண்டிலேயே நடைமுறைப்படுத்த அனுமதி வழங்க வேண்டும்,” என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை தீவிர பரிசீலித்ததன் அடிப்படையில், 3, 4, 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கும் நடப்பாண்டிலேயே புதிய பாடத்திட்டத்தை அமல்படுத்த ஆணை வெளியிடப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Government ,classes , New curriculum, 3rd, 4th, 5th and 8th classes ,coming academic year
× RELATED நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம்...