×

உள்ளாட்சிகளுக்கான ஒப்பந்த முறைகேடு அமைச்சர் வேலுமணிக்கு எதிரான ஆதாரங்கள் எங்கே? அறப்போர் இயக்கத்துக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை: உள்ளாட்சி அமைப்புகளுக்கான ஒப்பந்தப் பணிகளில் முறைகேடுகள் நடந்துள்ளதற்கு ஆதாரங்கள் எங்கே என்று வழக்கு தொடர்ந்த அறப்போர் இயக்கத்திற்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
 தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளின் பல்வேறு பணிகளுக்கான ஒப்பந்தங்கள் உள்ளாட்சித் துறையின் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு  வேண்டப்பட்டவர்களுக்கு வழங்கப்படுவதாக அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியது. மேலும், இந்த ஒப்பந்தங்கள் வழங்குவதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் அந்த அமைப்பு குற்றச்சாட்டுகளை வெளியிட்டது.  இதையடுத்து, தன்னைப் பற்றி அவதூறு கருத்துக்களை பரப்ப தடை விதிக்கவும், ஏற்கனவே அவதூறு பரப்பியதற்கு 1 கோடி இழப்பீடு வழங்குமாறு அறப்போர் இயக்கத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் சார்பில் ஆஜரான வக்கீல் வி.இளங்கோவன், செட்டிங் டெண்டர் என்ற பெயரில் டிவிட்டர் பக்கம் தொடங்கி, அமைச்சருக்கு எதிரான ஆதாரங்களை கோர்ட்டில் தாக்கல் செய்ய அறப்போர் இயக்கம் தயார் என்று  பதிவிடுகிறார்கள் என்று கூறி அதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்தார். இந்த ஆதாரங்களை படித்துப்பார்த்த நீதிபதி, அமைச்சருக்கு எதிரான ஆதாரங்கள் எங்கே, மனுதாரர் தரப்பு இந்த வழக்கில் ஏன் பதில் தரவில்லை என்று கேட்டு விசாரணையை வரும் 12ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Valamani ,Hike , Local Authorities, Contract Abuse, Minister Velumani, Charity Movement, HC
× RELATED “தூத்துக்குடி, நெல்லை நிகழ்ச்சிகளை...