×

மாருதி இக்னிஸ் பேஸ்லிப்ட் மாடல் விரைவில் அறிமுகம்

புதுப்பொலிவுடன் மாருதி இக்னிஸ் கார் விரைவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது. கடந்த 2017ம் ஆண்டு மாருதி ரிட்ஸ் காருக்கு மாற்றாக, இப்புதிய இக்னிஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இளைஞர்களை குறிவைத்து களமிறக்கப்பட்ட இந்த கார், விற்பனையில் ஓரளவு நல்ல எண்ணிக்கையை பதிவுசெய்து வருகிறது. இந்நிலையில், சந்தையில் பல புதிய மாடல்கள் வந்துவிட்டதால், இக்னிஸ் காரின் மீதான வாடிக்கையாளர்களின் கவனம் குறைந்துவிட்டது. எனவே, வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக வடிவமைப்பில் சிறிய மாற்றங்கள் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய இக்னிஸ் மாடலை மாருதி களமிறக்க உள்ளது. இந்த மாத இறுதியிலேயே இப்புதிய மாடல் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது.  புதிய இக்னிஸ் காரில் முகப்பு கிரில், ஹெட்லைட்டுகளில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. எல்இடி ஹெட்லைட், எல்இடி பகல்நேர விளக்கு உள்ளிட்டவை டாப் வேரியண்ட்டில் சேர்க்கப்பட்டுள்ளது.

புதிய மாருதி வேகன் ஆர், காரில் கொடுக்கப்பட்டு இருக்கும் ஸ்மார்ட்ப்ளே இன்போடெயின்மென்ட் சிஸ்டம், இப்புதிய இக்னிஸ் காரிலும் இடம்பெற இருக்கிறது. புதிய பாதுகாப்பு விதிமுறைகளுக்கு தக்கவாறு அதிவேகத்தை எச்சரிக்கும் வசதி, சீட் பெல்ட் அணிவது குறித்த எச்சரிக்கை, இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், டியூவல் ஏர்பேக் ஆகியவை அனைத்து வேரியண்ட்டுகளிலும் நிரந்தரமாக வழங்கப்பட்டுள்ளது.  இன்ஜின் ஆப்ஷன்களில் எந்த மாற்றமும் இல்லை. இந்த காரில் இருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 83 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். அறிமுகம் செய்யப்பட்டபோது டீசல் மாடலிலும் வந்தது. ஆனால், போதிய வரவேற்பு இல்லாததால், விற்பனையிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டது. பழைய வேரியண்ட்டுகள் தக்க வைக்கப்படும். தற்போது விற்பனையில் இருக்கும் மாடலைவிட புதிய மாருதி இக்னிஸ் கார் கூடுதல் விலையில் விற்பனைக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விலை விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Maruti Ignis Basel Model Introduction , Maruti Ignis, Baselift
× RELATED அதிரடியாக குறைந்த நிலையில் தங்கம் விலை மீண்டும் சவரனுக்கு ரூ.640 உயர்வு