×

சிகிச்சை பலனின்றி நோயாளி இறந்து 70 நாளாகியும் இறப்பு சான்றிதழ் கிடைக்காமல் குடும்பத்தினர் அவதி: அரசு மருத்துவமனையின் அவலம்

சென்னை: சென்னை நகரில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி இறந்து 70 நாட்கள் கடந்தும் இதுவரை அவரது குடும்பத்தினர்களிடம் இறப்பு சான்றிதழ் வழங்கப்படவில்லை. அரக்கோணத்தை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி பாவாஜி(40). இவர் ஜனவரி மாதம் 13ம் தேதி சாலை விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஜனவரி 21ம் தேதி, அவர் உயிரிழந்தார். அவருக்கு கடன் உள்ளதாம். அதேபோல அவரது வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுத்தல், சொத்து பரிமாற்றம் உள்ளிட்ட பல்ேவறு நடவடிக்கைகளுக்காக இறப்பு சான்றிதழ் அவசியம்.

இந்நிலையில் இதுவரை பாலாஜியின் இறப்பு சான்றிதழ் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக ராஜிவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனை உயரதிகாரியை தொடர்புகொண்டபோது, இறப்பு சான்றிதழ் மாநகராட்சியால் வழங்கப்படுகிறது. அதற்கு ஒரு மாதம் வரை ஆகும். எங்கள் தரப்பில் தாமதம் ஏற்படவில்லை என்று தெரிவித்தனர். மாநகராட்சி இணையதளத்தில் பார்த்து இறப்பு சான்றிதழை பதிவிறக்கம் செய்ய சொல்லுங்கள் என்றார். இந்நிலையில் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு அதிகாரி, இறப்பு சான்றிதழ் வழங்குவதற்கு 40 நாட்கள் வரை ஆகிறது. 300 முதல் 400 இறப்பு சான்றிதழ்களை ஒன்றாக பதிவேற்றம் செய்யப்படுகிறது என்றார்.
இந்நிலையில் மாநகராட்சி இணையதளத்தில் குறிப்பிட்ட நபரின் இறப்பு சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் மாநகராட்சி இணையதளத்தில் கடைசியாக டிசம்பர் 25ம் தேதி மருத்துவமனையில் இறந்தவரின் இறப்பு சான்றிதழ் (70 நாட்கள்) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதற்குபின் 70 நாட்களில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இறந்தவர்களின் இறப்பு சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்படவில்லை. இதுதொடர்பாக மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளை தொடர்புகொண்டபோது, அவர்கள் கூறியதாவது: இதற்கு மாநகராட்சி காரணம் அல்ல. மருத்துவமனையில் இருந்து போதுமான தகவல்கள் அளிக்கப்படாத நிலையில், இறப்பு சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்படாமல் இருக்கலாம். இவ்வாறு மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.        


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : death ,patient , Patient, death, death certificate, government hospital
× RELATED புதுச்சேரி ஜிப்மரில் நாளை...