×

அறங்காவலர் குழு தேர்வில் ஆளுங்கட்சி தலையீடு அதிமுக மாவட்ட செயலாளர்கள் தரும் பட்டியலுக்கு முன்னுரிமை வழங்க உத்தரவு: அறநிலையத்துறை அதிகாரிகள் அதிருப்தி

சென்னை: கோயில் அறங்காவலர் குழு தேர்வில் ஆளுங்கட்சி மாவட்ட செயலாளர்கள் தரும் பட்டியலில் உள்ளவர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு நெருக்கடி தருவதாக புகார் எழுந்துள்ளது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அறங்காவலர் குழு அமைக்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி உடனடியாக அறங்காவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டது. இதை தொடர்ந்து கமிஷனர் சார்பில் 2 லட்சம் முதல் 10 லட்சத்திற்கு குறைவான 672 கோயில்களில் அறங்காவலர் குழு நியமனம் செய்வது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. 5 பேர் கொண்ட அறங்காவலர் குழுவில் பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்காக, இணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், ஆய்வர்கள் அலுவலகத்தில் விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது தமிழகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இந்த நிலையில், அறங்காவலர்கள் குழுவில் ஆளும்கட்சி மாவட்ட செயலாளர்கள் தரும் பட்டியலில் உள்ளவர்களை தான் அந்தெந்த கோயில்களில் தேர்வு செய்ய வேண்டும் என்றும், அந்த பட்டியலில் உள்ளவர்களின் விண்ணப்பங்களை மட்டுமே மாவட்ட கமிட்டியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அவர்கள் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இதனால் நிர்வாகத்தில் ஏதாவது பிரச்சனை ஆகி விடுமோ என்ற பயமும் அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது என்று அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அறங்காவலர்கள் குழுவில் நியமனம் செய்ய தகுதியற்றவர்கள் யார், யார்?:
* ஒழுக்க கேடு சம்பந்தப்பட்ட குற்றத்திற்காக ஒரு குற்றவியல் நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டு அத்தகைய தண்டனை மாற்றப்படாமல் அல்லது மன்னிக்கப்படாமல் இருப்பவர்கள்.
* கடன் தீர்க்க சக்தியற்ற நொடிந்து போனவர்கள் என்று அறிவிக்கப்பட்டவர்கள் அல்லது அதற்கென விண்ணப்பம் செய்து கொண்டவர்கள்.
* அறநிலையத்துறையில் சேர வேண்டிய தொகையை செலுத்தாமல் கோயிலின் நிலங்களை சட்டத்திற்கு புறம்பாக அனுபவித்து வருபவர்கள்.
* அறநிலையத்துறைக்கு எதிராக ஊதியம் பெறும் வழக்கறிஞராக அமர்த்தப்பட்டிருப்பவர்கள்.
* அறங்காவலராக இருந்து அதன் நலன்களுக்கு எதிராக செயலாற்றி இத்துறை அதிகாரிகளால் நீக்கப்பட்டவர்.
* மத்திய அரசின் பணியில் இருந்தோ அல்லது மாநில அரசின் பணியில் இருந்தோ அல்லது உள்ளாட்சி மன்றங்களில் பணியில் இருந்தோ நீக்கப்பட்டவர்கள்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Governor ,intervention ,trustee committee examination ,district secretaries ,AIADMK , Trustee Committee Selection, Governance Intervention, AIADMK, Charitable Sector
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...