×

யாரையும் மிரட்டி கூட்டணி அமைக்கலப்பா!: பாஜக தமிழிசை பேட்டி

தூத்துக்குடி: நாங்கள் யாரையும் மிரட்டி கூட்டணி அமைக்கவில்லை. நல்ல கட்சிகளை திரட்டி கூட்டணி அமைத்து உள்ளோம் என தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தூத்துக்குடி மண்டலத்தில் பாஜ கொடியேற்றும் நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. நாங்கள் அமைத்துள்ள கூட்டணி நல்ல கூட்டணியாக இருக்கிறது. நாங்கள் யாரையும் மிரட்டி கூட்டணி அமைக்கவில்லை. நல்ல கட்சிகளை திரட்டி கூட்டணி அமைத்து உள்ளோம். நான் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுவது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும். கட்சி அனுமதித்தால் நான் தூத்துக்குடியில் போட்டியிடுவேன்.இவ்வாறு அவர் கூறினார்.

தூத்துக்குடியில் பாஜ சார்பில் நடந்த கொடியேற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்ற தமிழிசை பேசியதாவது:தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து நல்ல திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறது. மத்திய அரசு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்றும், மாநில அரசு வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அறிவித்து வழங்கி வருகிறது. காமராஜரை தோல்வி அடையச் செய்த கட்சி காங்கிரஸ். காமராஜரை கொண்டாடும் கட்சி பாரதிய ஜனதா. இன்றைய காங்கிரஸ் கட்சிக்கு காமராஜரை பற்றி பேச தகுதி இல்லை. பெண் குழந்தைகள் பாதுகாப்பிற்காக பாஜ தனி சட்டம் கொண்டு வந்துள்ளது. பெண்குழந்தைகள் படிக்க பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது.  இவ்வாறு அவர் பேசினார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Anyone ,Tamilnadu ,BJP , Coalition, BJP, democracy
× RELATED தமிழ்நாட்டில் நாளுக்கு நாள்...