×

இன்டர்போல் தேடும் குற்றவாளியான நிரவ் மோடி லண்டனில் சொகுசு வாழ்கை : அம்பலப்படுத்திய தி டெலிகிராப்

லண்டன்: வங்கியில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு இந்தியாவிலிருந்து தப்பியோடிய தொழிலதிபர் நிரவ் மோடி, லண்டனில் இருப்பதை அந்நாட்டு ஊடகம் ஒன்று வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்‌ஷியும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000  கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்து, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவை விட்டு வெளியேறி விட்டனர்.வங்கி மோசடி தொடர்பாக சி.பி.ஐ.,  அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை உள்ளிட்ட விசாரணை முகமைகள் விசாரணையை மேற்கொண்டு வருகின்றன. நிரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீசும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசின் கோரிக்கையை ஏற்று நிரவ் மோடிக்கு, இண்டர்போல் போலீஸார் ரெட் கார்னர் நோட்டீஸ் அளித்திருக்கும் நிலையில், லண்டனில் அவர் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக வீடியோ ஆதாரத்துடன் திடெலிகிராப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. லண்டன் வீதிகளில் சர்வ சாதாரணமாக உலா வரும் நிரவ் மோடியை சந்தித்து டெலிகிராப் செய்தியாளர் எழுப்பிய சரமாரியான கேள்விகளுக்கு பதிலளிக்க அவர் மறுத்து விட்டார்.  நிரவ் மோடி 8 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் ரூ.62.5 கோடி) மதிப்பிலான சொகுசு பங்களாவில் வாழ்ந்து வருவது தெரியவந்துள்ளது. இந்த பங்களாவின் மாத வாடகை 17,000 யூரோ (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.13 லட்சம்) என கூறப்படுகிறது. லண்டனில் ஆக்ஸ்போர்ட் தெரு அருகே உள்ள சொகுசு பங்களாவில் நிரவ் மோடி வசித்து வருவதாகவும், சோகோவில் புதிய வைர வியாபாரம் ஒன்றை துவக்கி உள்ளதாகவும் அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெலிகிராப் செய்தியாளர் அவரை சந்தித்த போது நிரவ் மோடி நெருப்பு கோழி தோலினால் செய்யப்பட்ட ரூ.15 லட்சம் மதிப்பிலான கோட் அணிந்திருந்தார். சர்வதேச அளவில் தேடப்பட்டு வரும் குற்றவாளியான நிரவ் மோடி, லண்டன் வீதிகளில் சகஜமாக சுற்றி வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நிரவ் மோடி, சர்வ சாதாரணமாக தனது சிறிய நாயை கூட்டிக் கொண்டு, சொகுசு பங்களாவில் இருந்து அருகில் இருக்கும் தனது அலுவலகத்திற்கு  சென்று வருகிறார்.நீங்கள் லண்டனில் அடைக்கலம் புகுந்து உள்ளீர்களா? என  செய்தி நிருபர் கேள்வி எழுப்புகிறார். ஆனால் அவரின் கேள்விகள் அனைத்திற்கும் நிரவ் மோடி பதிலளிக்க மறுத்து விட்டார். நிரவ் மோடி லண்டனில் வசிப்பது அதிகாரபூர்வமாக உறுதிசெய்யப்பட்டுள்ளதால், இந்தியா அடுத்தகட்ட நடவடிக்கைகளில் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Interpol ,Nivv Modi ,The Telegraph ,London , Nirvu Modi, London, Luxury Life
× RELATED இன்டர்போல் உதவியுடன் யுஏஇயில்...