×

கந்தர்வகோட்டை பகுதியில் பயன்படாத பள்ளி கட்டிடம், சேதமான அங்கன்வாடி மையம்

*உடனே அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்

கந்தர்வகோட்டை : கந்தர்வகோட்டை பகுதியில் பயன்படாத பள்ளி கட்டிடம், சேதமான அங்கன்வாடி மையத்தை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ராசாப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பழைய கட்டிடம் என்பதால் பயன்படுத்தாத நிலையில் சேத மடைந்து காணப்படுகிறது. அருகிலேயே புதிய பள்ளி கட்டிடத்தில் ஒரு வகுப் பறை செயல்பட்டு வருகிறது.

எனவே பயன்படாத பழைய பள்ளி வகுப்பறை கட்டிடத்தை அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. பழைய கட்டிடத்தை அப்புறப்படுத்த பள்ளி சார்பாக மாவட்ட நிர்வாகத்திற்கும், வட்டார கல்வி நிர்வாகத்திற்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாத நிலை உள்ளது. எனவே பழைய பயன்படுத்தாத கட்டிடத்தை அப்புறப்படுத்தினால் மாணவ, மாணவிகள் விளையாட்டு மைதானமாக பயன்படுத்துவார்கள். தனியார் பள்ளி களுக்கு இணையாக இப்பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் நடத்தப்பட்டு வருகின்றன.

அதற்கேற்றார் போல் கட்டிட வசதியையும் தனியார் பள்ளிக்கு இணையாக ஏற் படுத்தி தரவேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.அங்கன்வாடி மையம்: கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் ராசாப்பட்டியில் இயங்கி வரும் அங்கன் வாடி மையம் கட்டிடம் சேதமடைந்து காணப்படுகிறது. குழந்தைகள் வந்து செல்லும் கட்டிடம் என்பதால் இதில் அதிகாரிகள் அக்கறை காட்டி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த அங்கன்வாடி மையத்தில் கிட்டத்தட்ட 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் காலையில் வந்து மதிய உணவு சாப்பிட்டு விட்டு வீடு திரும்புகின்றனர். கட்டி டத்தின் மேற்பகுதி சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் கட்டிடம் முழுவதும் சேதமடைந்து விரிசலுடன் உள்ளது. எந்நேரமும் அசம்பாவிதம் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே விபத்து ஏற்படும் முன் அதிகாரிகள் இதில் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அங்கன்வாடி மையங்களின் கந்தர்வகோட்டை தலைமை அலுவலகம் இடிந்த கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.

இதுகுறித்து செய்தி மூலமாகவும், நேரிலும் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடி க்கை எடுக்காமல் உள்ளனர். எனவே அதிகாரிகள் மெத்தனம் காட்டாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : area ,Gandharvatai ,Anganwadi Center , damaged condition,Gandharvakottai ,School building,Anganvadi Building
× RELATED திருவொற்றியூரில் அங்கன்வாடி மைய பணிக்கு அடிக்கல்