×

எங்களது 2-வது போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கான ஆதாரங்கள் எங்கே..? : பாகிஸ்தானுக்கு இந்தியா கேள்வி

டெல்லி: இந்தியாவின் 2-வது போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கான ஆதாரங்கள் இருந்தால் வெளியிடலாமே  என பாகிஸ்தானுக்கு இந்தியா கேள்வி எழுப்பியுள்ளது. டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், இந்திய விமானப் படைக்குச் சொந்தமான 2வது விமானத்தை வீழ்த்தியதாகக் கூறும் பாகிஸ்தான் அதற்கான ஆதாரத்தை சர்வதேச ஊடகங்களில் வெளியிட வேண்டியது தானே என்றார். 2வது விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறும் தகவலில்  உண்மையில்லை எனவும் கூறினார்.

புல்வாமா தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பே காரணம் என பொறுப்பேற்ற நிலையில் பாகிஸ்தான் மறுத்து வருகிறது.புதிய பாகிஸ்தான் உருவாகிவிட்டதாகக் கூறும் இம்ரான் கான் பயங்கரவாதிகள் மீது புதிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்காமல் தயங்குவது ஏன். புல்வாமா தாக்குதலுக்குக் காரணமான பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ- முகமது அமைப்பை பாகிஸ்தான் பாதுகாக்கிறதா என வினவினார்.

எஃப் 16 ரக விமானங்களை பாகிஸ்தான் குவித்தது. அதில் ஒன்றை வீழ்த்திவிட்டதற்கான ஆதாரம் இந்தியாவிடம் உள்ளது. எப் 16 விமானத்தை பாகிஸ்தான் தேவையின்றி பயன்படுத்தியது குறித்து அமெரிக்காவிடம் முறையிடப்பட்டுள்ளதாக கூறினார். நிரவ் மோடியை இந்தியா கொண்டுவருவதற்காக பிரிட்டன் அரசுடன் தொடர்ந்து பேசி வருகிறோம் என ரவீஷ்குமார் கூறினார். மேலும் நிரவ் மோடியை நாடு கடத்த வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கை குறித்து பிரிட்டன் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை என தெரிவித்தார்.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் முகாம்கள் மீது இந்திய விமான படை தாக்குதல் நடத்தியது. இதில் ஏராளமான தீவிரவாதிகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலால் ஆத்திரம் அடைந்த பாகிஸ்தான் தனது எஃப் 16 ரக விமானங்களை இந்தியா வான்வெளியில் பறக்கவிட்டது. இதையடுத்து அந்த விமானங்களை துரத்தி கொண்டு இந்தியாவின் மிக் ரக விமானங்கள் சென்றன. அப்போது மிக் ரக விமானத்தை பாகிஸ்தான் சுட்டதில் அந்த விமானம் அந்நாட்டு எல்லையில் விழுந்தது. இதையடுத்து அதிலிருந்த விங் கமாண்டர் அபிநந்தன் சிறை பிடிக்கப்பட்டு உலக நாடுகளின் கண்டனதை அடுத்து விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் இந்தியாவின் இன்னொரு போர் விமானத்தையும் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தொடர்ந்து கூறிவருவது குறிப்பிடத்தக்கது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : India ,Pakistan , External Affairs Ministry, Pakistan, India, Question, Raveys Kumar,
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!