×

தோல் புற்றுநோய்களின் அறிகுறிகள் ஆரம்பகட்டத்திலே வெளிப்படும்

* தகவல்பலகை

தோல்புற்றுநோய் என்பது தோலில் உள்ள உயிரணுக்களின் இயல்பை மீறிய வளர்ச்சியும், பெருக்கமும் ஆகும். இது பல்வேறு நிலைகளில் இருக்கும். மூன்றுவித தோல்புற்று மிகவும் பாதிப்பை தரும். அடிக்கலப்புற்றுநோய், செதிட்கலப்புற்றுநோய், மெலனோமா அல்லது கரியநிறமிப்புற்றுநோய் இவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட உயிரணுக்களில் ஏற்படுவதால் அவற்றின் பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றன.

தோல்புற்றுநோய் தோலின் மென்மையான மேல்தோலில் ஏற்படுவதால் புற்றுநோய்க்கட்டிகளை எளிதில் கண்டறிய முடிகிறது. இதனால் மற்ற புற்றுநோய்களை போல் இல்லாமல் இதனை தொடக்க காலத்திலே தெரிந்து கொள்ளவதால் உரிய சிகிச்சையை மேற்கொள்ள முடியும். எனவே இவ்வகை புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை மற்ற புற்றுநோய்களை விட குறைவாக இருக்கிறது. தோல்புற்றுநோய் உண்டாக முதன்மையான காரணம் புறஊதாக்கதிர்கள்தான். இதனால் மற்ற புற்றுநோய்களை விட தோல்புற்றுநோய்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது.

முகப்பகுதியில் அடிக்கலப்புற்றுநோய் ஏற்படும். இவை பரவாது. அறுவைச்சிகிச்சை அல்லது கதிரியக்கம் மூலம் எளிதில் குணப்படுத்தலாம். செதிட்கலபுற்றுநோய் ஓரளவு இடம்பெயரும் தன்மை கொண்டது. ஆனால் கரிநிறமிப்புற்றுநோய் அனைத்து தோல்தொற்றுநோய்களில் இருந்தும் அரிதாகவும், ஆபத்தானதாகவும் உள்ளது. இது இடம்பெயரும் தன்மை கொண்டவை என்பதால் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

வெவ்வேறுவிதமான அறிகுறிகள் மூலம் இப்புற்றுநோய்களை உணர்ந்து கொள்ள முடியும். தோலில் ஏதாவது ஒரு மாற்றம் ஏற்பட்டு குணமடைந்து இருப்பது, தோலில் ஏற்படும் புண்கள், நிறமாற்றம், ஏற்கனவே ஒரு மச்சத்தில் மாறுபாடு ஏற்படுவது போன்றவை சந்தேகத்திற்கிடமான அறிகுறிகளாகும். எனவே மச்சத்தின் ஓரங்கள் ஒழுங்கற்றுப்போவது அல்லது மச்சம் பெரிதாகி கொண்டே சென்றாலும் அது புற்றுநோயின் அறிகுறியாகவே கருதப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Information Board,skin cancer,Symptoms
× RELATED விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை ராமதாஸ் வலியுறுத்தல்