×

கம்பம்மெட்டு சாலை மார்ச் 11ல் திறக்க வாய்ப்பு

கம்பம் : கம்பம்மெட்டு சாலை அமைக்கும் பணி வேகமாக நடைபெறுவதாகவும், மார்ச் 11ம் தேதி முதல் திறக்க வாய்ப்பு உள்ளதாகவும் மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். உத்தமபாளையம் மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் கம்பம்மெட்டு சாலை உள்ளது. இங்கு சாலைகள் மோசமாக உள்ளதாக வந்த புகாரை அடுத்து ரூ.2.55 கோடி செலவில் கம்பம்மெட்டின் 5 வது கிலோ மீட்டரில் இருந்து 9 கிலோமீட்டர் தூரம் வரை பணிகள் நடந்து வருகின்றன.

இதன் பணிகள் காரணமாக கம்பத்தில் இருந்து செல்லும் வாகனங்கள் அனைத்தும் குமுளி வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளது. இதனால் கேரளாவிற்கு செல்வதில் பல பிரச்னைகள் எழுகின்றன. இரவில் மட்டுமே ஒன்றிரண்டு வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. இதனையடுத்து பணிகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் துரிதமாக செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி பணிகள் நிறைவடைந்து வரும் 11ம் தேதி (திங்கள் கிழமை) முதல் மீண்டும் சாலை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உத்தமபாளையம் மாநிலநெடுஞ்சாலைத்துறை உதவிகோட்டப்பொறியாளர் கிருஷ்ணன் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : road , CumbumMettu Road, Cumbum,Road,Public service, March 11
× RELATED ரூ.1.52 கோடி மதிப்பீட்டில் பராமரிப்பு புதுப்பொலிவு பெற்ற கரிசல்குளம் சாலை