கொயந்தயா மாறிய அமைச்சர் டாடி...டாடி...மோடி டாடி..!

வத்திராயிருப்பு: வலிமையான இந்தியாவை உருவாக்குவதற்கு பாடுபடும் மோடிதான் எங்கள் டாடி என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார். விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மகாராஜபுரத்தில் திருமண நிகழ்ச்சிக்கு வந்த அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது: தேர்தல் ஜூரத்தில்தான் பிரதமர் மோடி மீது, ராகுல்காந்தி ரபேல் விமான ஊழல் குற்றச்சாட்டை கூறி வருகிறார். தேர்தல் பயத்தில் மோடி மீது பல தவறான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். தேமுதிக கூட்டணி சுமுகமாக முடியும். எம்ஜிஆர் பெயரை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வைக்க வேண்டும் என்று முதல்வர் கோரிக்கை வைத்ததன்பேரில்தான் எம்ஜிஆர் பெயரை மோடி சூட்டினார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தின் வலிமையை காக்க ஜெயலலிதா தனித்து போட்டியிட்டார். பிரதமர் மோடியை எதிர்ப்பதற்காக அல்ல.

டிடிவி.தினகரன் குக்கர் சின்னத்துக்காக மேல்முறையீடு செய்யலாம். ஆனால், இரட்டை இலை சின்னம் அதிமுகவிற்கு தான் சொந்தம். தினகரன் ஒரு தரிசுக்காடு, அவரிடம் இருப்பவர்கள் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என ஓடி விடுவார்கள். தேர்தல் முடிந்தவுடன் தினகரனிடம் இருப்பவர்கள் எங்களிடம் வந்து விடுவார்கள். இந்தியாவை காக்க தீவிரவாதிகள் மீது மோடி தாக்குதல் நடத்தி வருகிறார். வலிமையான இந்தியாவை உருவாக்குவதற்கு மோடி பாடுபட்டு வருகிறார். மோடி எங்கள் டாடி. இவ்வாறு அவர் கூறினார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா, மோடியா இந்த லேடியா என்று கேட்டு பிரசாரம் செய்தார். இப்போது அதிமுக அமைச்சரே மோடி எங்கள் டாடி என்று கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>