×

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கை, கால்கள்

பெரம்பூர்:  விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரை சேர்ந்தவர் இளங்கோவன் (28), கூலி தொழிலாளி. இவர், விபத்தில் ஒரு காலை இழந்து விட்டார். அதைப்போல், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜோதி (45), தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தபோது இயந்திரத்தில் சிக்கி ஒரு கையை இழந்து விட்டார். புழல் அடுத்த காரனோடையை சேர்ந்தவர் முனுசாமி (54). இவர், சர்க்கரை  வியாதியால் ஒரு கையை இழந்து விட்டார். செங்குன்றத்தை சேர்ந்தவர்  பஞ்சவர்ணம் (45). சர்க்கரை  வியாதியால் ஒரு காலை இழந்து விட்டார். இவர்களுக்கு இலவசமாக செயற்கை கை, கால்களை பொருத்தி ஸ்டான்லி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் பொன்னம்பல நமச்சிவாயம் கூறியதாவது:

விபத்து மற்றும் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டு கை, கால்களை இழந்தவர்களுக்கு செயற்கை முறையில் கை, கால்கள் பொருத்தப்பட்டுள்ளது.  மருத்துவர் கீதா கல்பனா தலைமையில் முதல்முறையாக கை, கால்கள் பொருத்தப்பட்டுள்ளன.  இவர்களுக்கு முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் மூலம் இந்த சிகிச்சை இலவசமாக செய்யப்பட்டது. இதுவே தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று செயற்கை கை, கால் பொருத்தப்பட்டிருந்தால் 1.5 லட்சம் வரை செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Stanley Government Hospital ,persons , Stanley Government Hospital, Disabled, Artificial Hands, Legs
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...