×

பாலியல் தொல்லை செய்வதாக மகள்கள் புகார்: சைல்ட் லைன் விசாரணைக்கு பயந்து தந்தை தூக்கிட்டு தற்கொலை

சென்னை: சென்னை நெசப்பாக்கம் கணபதி நபரை சேர்ந்தவர் ஆறுமுகம் (42). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு 14 மற்றும் 11 வயதில் 2 மகள்கள் உள்ளனர். மனைவி 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். தாய் இல்லாததால் ஆறுமுகம் இரண்டு மகள்களுடன் தனியே வசித்து வந்துள்ளார்.கடந்த சில மாதங்களாக ஆறுமுகம் இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு வந்து, தனது 2 மகள்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். தனது தந்தையே பாலியல் தொந்தரவில் ஈடுபடுகிறாரே என 2 மகள்களும் வேதனையில் தவித்தனர். இந்நிலையில், கடந்த வாரம் குழந்தைகள் நல குழுமத்தில் 2 மகள்களும் செல்போன் மூலம் தனது தந்தை ஆறுமுகத்தின் மீது பாலியல்  புகார் கொடுத்தனர். அதை தொடர்ந்து ஆறுமுகத்திடம் இரண்டு நாட்களுக்கு முன்பு குழந்தைகள் நல குழும அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். மீண்டும் நேற்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அதிகாரிகள் கூறிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் அப்பகுதி முழுவதும் தெரியவந்தது.

இதனால், அவமானத்தில் ஆறுமுகம் நேற்று முன்தினம் இரவு வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்ததும் எம்.ஜி.ஆர். நகர் போலீசார் விரைந்து வந்து, ஆறுமுகத்தின் சடலத்தை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Daughters ,suicide ,child line trial , Sexual harassment, daughters, suicide by throwing the father
× RELATED பொய் சொன்னால் தப்பில்லை; ஆண் - பெண்...