×

அன்புமணி மனைவி சவுமியா தர்மபுரியில் போட்டி? : ராமதாஸ் முடிவால் தொண்டர்கள் அதிர்ச்சி

சென்னை : அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், விழுப்புரம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கடலூர், மத்திய சென்னை ஆகிய தொகுதிகளை ஒதுக்குகிறது. தர்மபுரியில் அன்புமணி அல்லது அவரது மனைவி சவுமியா அன்புமணியை நிறுத்த ராமதாஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சவுமியாவை நிறுத்தினால், ராஜ்யசபா சீட் மூலம் அன்புமணி எளிதாக எம்பியாகலாம் என இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல அரக்கோணத்தில் வேலுவை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவர், முன்னாள் மத்திய அமைச்சர். ராமதாசின் நெருங்கிய உறவினர். மேலும், கள்ளக்குறிச்சியில் மற்றொரு உறவினர் தன்ராஜ் நிறுத்தப்படுகிறார். அதேபோல, மத்திய சென்னையில் போயஸ்கார்டனில் வசிக்கும் உறவினர் ஒருவரை நிறுத்தவும் ராமதாஸ் முடிவு செய்துள்ளார். விழுப்புரம் தனி தொகுதி என்பதால் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வடிவேல் ராவணன் நிறுத்தப்படுகிறார். இது தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தன்னைத் தவிர, குடும்பத்தினர் யாரும் கட்சிக்குள் வரமாட்டார்கள். அவ்வாறு வந்தால் முச்சந்தியில் நிறுத்தி சவுக்கால் அடியுங்கள் என ராமதாஸ் கூறியிருந்தார். இன்று பாமகவில் உறவினர்களைத் தவிர மற்றவர்களுக்கு சீட் இல்லை என்ற நிலை தற்போது உருவாகி வருவதாக தொண்டர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Soumya ,Dhamma ,Dharmapuri ,Volunteers ,Ramadoss , Anbumani wife Soumya, competed in Dharmapuri?
× RELATED தருமபுரி அருகே சௌமியா அன்புமணி காரை மறித்து பறக்கும் படையினர் சோதனை!!