×

தேனாம்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் தானியங்கி கண்ணாடி கதவு உடைந்து விபத்து: பயணிகள் அச்சம்

சென்னை: தேனாம்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் தானியங்கி கண்ணாடி கதவு உடைந்து விபத்து ஏற்பட்டது. மெட்ரோ ரயில் நிலையங்களில் தொடரும் விபத்தால் பயணிகள் மத்தியில் அச்சம் ஏற்படுத்தியுள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்களில் தொடர் விபத்துக்கள் என்பது வாடிக்கையாகி வருகிறது. கடந்த வாரம் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தின் சுரங்கபாதையில் சுவரில் ஒட்டப்பட்டிருந்த டைல்ஸ் கற்கள் உடைந்து விபத்து ஏற்பட்டது. இந்தநிலையில், தேனாம்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று மாலை நிலைய ஊழியர் ஒருவர் சுரங்கபாதை ரயில் நிலையத்தை துப்புரவு இயந்திரத்தை கொண்டு துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது, தானியங்கி கதவுக்கு அருகில் சுத்தம் செய்ய இயந்திரத்தை வேகமாக இயக்கினார். இதில் எதிர்பாராத விதமாக துப்புரவு இயந்திரம் தானியங்கி கதவின் மேல் வேகமாக மோதியது.
இதில், தானியங்கி கண்ணாடி கதவு உடைந்த கண்ணாடி துகள்கள் தரையில் விழுந்தது. இதனால், அருகில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஊழியரிடம் விசாரித்தனர். பின்னர், துப்புரவு ஊழியர்கள் மூலம் கண்ணாடி துகள்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் குறிப்பிட்ட தானியங்கி கதவு நேற்று முழுவதும் செயல்படாமல் மூடியே இருந்தது. ஒரு புறத்தில் மட்டுமே கதவு திறக்கப்பட்டது. மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள தானியங்கி கண்ணாடி கதவானது பைபரால் தயாரிக்கப்பட்டது. யாரும் உடைக்க முடியாத படி இருக்கும். ஆனால், சிறிய துப்புரவு இயந்திரம் மோதி தானியங்கி கதவு கண்ணாடி பெரும் அளவில் உடைந்த சம்பவம் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : station ,Tengpet ,accident , TENANTAMPET, METRO MRT Station, NON-GOVERN,
× RELATED மேட்டூர் அனல் மின் நிலையத்தில்...