×

அமமுக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு

தாம்பரம்:மேற்கு தாம்பரம் வனத்துறை அலுவலகம் அருகே ஒத்தவாடை தெருவை சேர்ந்தவர் நாகராஜ் (எ) பீப்பி நாகராஜ் (38). அமமுக வட்ட செயலாளரான இவர், பல்வேறு நிகழ்ச்சிகளில் நாதஸ்வர கச்சேரி நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி தேவி (34), 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் வீட்டுக்குள் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டு தேவி திறந்தார். வீட்டுக்குள் 3 பேர் கும்பல் திடீரென அத்துமீறி நுழைந்து, நாகராஜை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பியது. தேவி அலறியபடி தடுத்தபோது, அவரது கைகள் மற்றும் தோள் பகுதியில் பலத்த வெட்டு விழுந்தது. படுகாயமடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Amyam , Amigami personality, cut the sickle
× RELATED அமமுக அலுவலகத்தில் அதிமுகவினர்...