×

ஐநா மேம்பாட்டு திட்ட தூதராக நடிகை பத்மா லட்சுமி நியமனம்

நியூயார்க்: ஐநா மேம்பாட்டு திட்ட தூதராக இந்திய வம்சாவளியை சேர்ந்த தொலைக்காட்சி நடிகை பத்மா லட்சுமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு அமெரிக்காவில் உள்ள ஐநா சபையின் மேம்பாட்டு திட்டத் துறை தனது தூதராக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க தொலைக்காட்சி நடிகையான பத்மா லட்சுமியை நியமனம் செய்துள்ளது. ஐநா தலைைமயகத்தில் நடைபெற்ற விழாவில், ஐநா மேம்பாட்டு திட்ட நிர்வாகி அசிம் ஷ்டெய்னர் இதை அறிவித்தார். இது தொடர்பாக பத்மா லட்சுமி கூறுகையில், ‘`பெண்கள் தினம் கொண்டாடும் இந்த நேரத்தில், உலகத்தில் பெண்களும், சிறுமிகளும் சில துன்பங்களை சந்தித்து வருவதை எண்ணிப் பார்க்கிறேன் பல நாடுகள் வறுமையை ஒழித்து விட்டாலும் சமத்துவத்தை நிலைநாட்டவில்லை. இது பெண்களை கடுமையாக பாதித்துள்ளது. அதை நீக்க பாடுபடுவேன்’’ என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Padma Lakshmi ,Ambassador ,UN Development Program , UN Development Program, actress Padma Lakshmi, appointed
× RELATED போட்டோ எடுக்கக்கூடாதா? நான் ஓட்டே போட...