×

சையது முஷ்டாக் அலி டிராபி டி201 ரன் வித்தியாசத்தில் ஜார்க்கண்ட் த்ரில் வெற்றி: குஜராத் ஏமாற்றம்

ராஞ்சி: சையது முஷ்டாக் அலி டிராபி சூப்பர் லீக் சுற்று ஏ பிரிவு ஆட்டத்தில், குஜாரத் அணிக்கு எதிராக ஜார்க்கண்ட் கடைசி பந்தில் வெற்றியை வசப்படுத்தியது. எமரால்டு உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீசியது. மழை காரணமாக ஆட்டம் தாமதமானதால் தலா 18 ஓவர் கொண்ட போட்டியாக நடுவர்கள் அறிவித்தனர். ஜார்க்கண்ட் 18 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 148 ரன் குவித்தது. ஆனந்த் சிங் 45, கேப்டன் இஷான் கிஷண் 39, சவுரவ் திவாரி 13, தியோப்ரத் 22* ரன் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய குஜராத் அணி 18 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன் எடுத்து 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. கரண் பட்டேல் அதிகபட்சமாக 35, அக்சர் பட்டேல் 28, பியுஷ் சாவ்லா 20, பியுஷ் தன்வார் 12, ஹேமங் பட்டேல் 13 ரன் எடுத்தனர். சிராக் காந்தி 23 ரன் (13 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்), நக்வஸ்வாலா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஜார்க்கண்ட் பந்துவீச்சில் உத்கர்ஷ் சிங், விகாஷ் சிங், அனுகுல் ராய், ஆனந்த் சிங் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். கடைசி பந்தில் த்ரில் வெற்றியை வசப்படுத்திய ஜார்க்கண்ட் 4 புள்ளிகளை தட்டிச் சென்றது. டெல்லியை வீழ்த்தியது விதர்பா இந்தூரில் நேற்று நடைபெற்ற பி பிரிவு சூப்பர் லீக் ஆட்டத்தில் டெல்லி - விதர்பா அணிகள் மோதின. ஹோல்கர் ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற விதர்பா முதலில் பந்துவீசியது. டெல்லி அணி 16.2 ஓவரில் 83 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஹிதென் தலால் 42 ரன் (34 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்), பவான் நேகி 18 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர்.

விதர்பா பந்துவீச்சில் உமேஷ் யாதவ், காந்த் வாஹ், யாஷ் தாகூர், அக்‌ஷய் கர்னிவார் தலா 2 விக்கெட், டெய்டே 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய விதர்பா அணி 8.3 ஓவரிலேயே 1 விக்கெட் இழப்புக்கு 85 ரன் எடுத்து எளிதாக வென்றது. ஜிதேஷ் ஷர்மா 41 ரன் (24 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தார். டெய்டே 32, ஷலப் வஸ்தவா 8 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். விதர்பா அணிக்கு 4 புள்ளிகள் கிடைத்தன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jharkhand ,victory ,Syed Mushtaq Ali Trophy T 201 ,Gujarat , Syed Mushtaq Ali Trophy, Jharkhand, Gujarat
× RELATED ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர்...