×

மண்டியா மக்களவை தொகுதியில் அம்பரீஷ் மனைவி சுமலதா சுயேச்சையாக போட்டி? பாஜ.வுக்கு இழுக்க எடியூரப்பா முயற்சி

மண்டியா: மண்டியா மக்களவை தொகுதியில் நடிகர் அம்பரீஷின் மனைவி சுமலதா சுயேச்சையாக  போட்டியிட முடிவு செய்துள்ளார். கர்நாடகாவில் உள்ள மண்டியாவின்  மைந்தன் என்று பெயர் எடுத்தவர் கன்னட நடிகர் அம்பரீஷ். இவர் கைகாட்டியவர்கள்தான் அந்த தொகுதியில் வெற்றி பெற்றனர். அவரது மறைவுக்கு  பிறகு அம்பரீஷின் மனைவியும் நடிகையுமான சுமலதா அத்தொகுதியில் காங்கிரஸ்  சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, முன்னாள் முதல்வர் சித்தராமையாவிடம் வாய்ப்பு கேட்டார்.  ஆனால், இந்த தொகுதியை கூட்டணி கட்சியான மஜத.வுக்கு வழங்க காங்கிரஸ் தலைமை  முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதனால், சுமலதா இத்தொகுதியில் சுயேச்சையாக களம் காண முடிவு செய்துள்ளார். அதே நேரம், அவரை பாஜ.வுக்கு இழுக்க இதன் மாநில தலைவர் எடியூரப்பா முயற்சி செய்து வருகிறார்.  பாஜ.வில் சேர சுமலதாவுக்கு விரும்பம் இல்லாமல் போனால், தேர்தலில் அவருக்கு  ஆதரவாக செயல்படவும் பாஜ திட்டமிட்டுள்ளது.

மேலும், சுயேச்சையாக சுமலாத  போட்டியிட்டால் மண்டியாவில் அவருக்கு ஆதரவாக நடிகர் ரஜினி பிரசாரம் செய்ய  இருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பரபரப்பான சூழ்நிலையில், நேற்று காலை  முன்னாள் எம்எல்ஏ ரமேஷ் பன்டிசித்தேகவுடாவை அவரது வீட்டில் சந்தித்த  சுமலதா, தேர்தலில் தனக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக் கொண்டார். அதேபோல், அங்கு நடந்த கூட்டத்தில் சுமலதா பேசும்போது, ‘‘எனக்கு எந்த  கட்சியும் கிடையாது. என்னுடைய கட்சி அம்பரீஷ் தான். இதனால், மக்களவை  தேர்தலில் மண்டியா மக்கள் எனக்கு ஆசீர்வாதம் வழங்க வேண்டும்’’ என்று கூறி  வாக்கு கேட்டார். பின்னர், ஸ்ரீரங்கபட்ணா தொகுதிக்கு சென்ற அவருக்கு 5 ஆயிரம் பேர் பட்டாசு வெடித்து  வரவேற்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sumalatha ,Ambalish ,constituency ,Mandya Lok Sabha ,BJP , Mandya Lok Sabha constituency, Amrish's wife, Sumalatha, Bhaj, Edayurappa
× RELATED பிரசாரத்திற்கு பாஜ, சுமலதா ஒத்துழைக்கவில்லை: தேவகவுடா வேதனை