சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம்: பாண்டிராஜ் இயக்குகிறார்

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை பாண்டிராஜ் இயக்க உள்ளார். எந்திரன்,  சர்கார், பேட்ட படங்களின் மெகா வெற்றிக்கு பிறகு சன் பிக்சர்ஸ்  தயாரிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. இதில்  சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார். சன் டிவி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். பாண்டிராஜ் இயக்குகிறார். படத்தின்  தலைப்பு, பிற நட்சத்திரங்கள், டெக்னீஷியன்கள் பற்றிய அறிவிப்பு விரைவில்  வெளியாக உள்ளது. பாண்டிராஜ் இயக்கத்தில் மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா படங்களில் சிவகார்த்திகேயன்  நடித்திருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படம் மூலம் இருவரும்  மீண்டும் இணைகிறார்கள். கடைக்குட்டி சிங்கம் வெற்றிக்கு பிறகு  பாண்டிராஜின் அடுத்த படம் தொடர்பான அறிவிப்புக்கு ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில் இந்த பட அறிவிப்பு வெளியாகி, ரசிகர்களை  மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தொடர் வெற்றி படங்களை கொடுத்து வரும் சன்  பிக்சர்ஸ், சிவகார்த்திகேயன், பாண்டிராஜ் ஆகியோர் ஒரே படத்தில் இணைவதால்  படத்துக்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sivakarthikeyan ,Pandiraj ,Sun Pictures , Sun Pictures Production, Sivakarthikeyan, Pandiraj
× RELATED சிவகார்த்திகேயனுடன் சண்டைபோடும் நடிகை