×

3-வது ஒருநாள் போட்டி : இந்தியாவை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸி.,

ராஞ்சி: இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் இன்று பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சு தேர்வு செய்தார். இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. ஆஸ்திரேலிய அணியில் கவுல்டர்-நைல் நீக்கப்பட்டு ரிச்சர்ட்சன் சேர்க்கப்பட்டார்.

ஆஸ்திரேலிய அணியினில் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய உஸ்மான் கவாஜா, ஆரோன் பிஞ்ச் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இவர்களின் அதிரடியால் 193 ரன்கள் வரை விக்கெட் விழகில்லை. ஆஸ்திரேலிய அணி 193 ரன்கள் எடுத்திருந்த போது எடுத்திருக்கும்போது ஆரோன் பிஞ்ச் 99 பந்தில் 10 பவுண்டரி, 3 சிக்சருடன் 93 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். கவாஜா 107 பந்தில் சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 104 ரன்னில்  ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியா 50 ஓவவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 313 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

314 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. தவான் 1 ரன்னிலும், ரோகித் 14 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ராயுடு 2 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய கேப்டன் கோலி - தோனி இணை ஓரளவு அதிரடி மற்றும் நிதானமாக ஆடியது. தோனி 46 பந்துகளில் 26 ரன் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். கேப்டன் கோலி அதிரடியாகவும் பொறுப்பாகவும் விளையாடி தனது 41-வது சதத்தை 86 பந்துகளில் பூர்த்தி செய்தார். கோலி 95 பந்துகளில் 123 ரனகள் குவித்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஜாதவ் 26 ரன்களிலும், அதிரடியாக ஆடத்துவங்கிய விஜய் சங்கர் 32 ரன்களிலும், ஜடேஜா 24 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியாக இந்திய அணி 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 281 ரன்களை எடுத்து ஆஸ்திரேலிய அணியிடம் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. இதனையடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : India ,Aussie , India, Australia, win
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...