×

ஜெ.மரணம் தொடர்பாக நடைபெறும் விசாரணை பணிகள் 90% நிறைவு: உயர்நீதிமன்றத்தில் ஆறுமுகசாமி ஆணையம் தகவல்

ஜெ.மரணம் தொடர்பாக நடைபெறும் விசாரணை பணிகள் 90% நிறைவு: உயர்நீதிமன்றத்தில் ஆறுமுகசாமி ஆணையம் தகவல்

சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் பணிகள் 90% நிறைவடைந்திருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அந்த ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் சர்ச்சை ஏற்படுத்தியதையடுத்து, அதுகுறித்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. இந்த ஆணையம் ஜெயலலிதாவுக்கு வழங்கிய சிகிச்சை குறித்து தங்கள் மருத்துவர்களிடம் விசாரிக்க தடை கோரியும், விசாரணை ஆணையம் அமைத்த அரசாணையை எதிர்த்து அப்பல்லோ மருத்துவமனை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யபட்டது.

இந்த வழக்கு, நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வில், மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜெ.மரணம் தொடர்பான இதுவரை 155 பேரிடம் விசாரணை நடத்தியிருப்பதாக தகவல் தெரிவித்தார். மேலும், ஆணையத்தின் பணிகள் 90% நிறைவடைந்திருப்பதாகவும், அந்த அறிக்கையை தமிழக அரசிடம் தாக்கல் செய்யவுள்ள நிலையில், அதனை தடுக்கும் வகையில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். எந்த காரணங்களுக்காகவும் விசாரணைணை ஆணையம் நிறுத்தாது. உயர்நீதிமன்றம் உத்தரவிட்டால் மருத்துவர் குழு அமைக்க தயார் எனவும் அவர் கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : High Court ,J. Jayalakshmi: Arumugamasi Commission , JJayalalitha Death, High Court, Arumugamasi Commission, Apollo
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...