×

வீரத்தை வெளிப்படுத்தி இதயங்களை வென்ற விங் கமாண்டர் அபிநந்தனுக்கு பரம்வீர் சக்ரா விருது வழங்க முதல்வர் கோரிக்கை

சென்னை: இந்திய விமானப் படை வீரர் அபிநந்தனுக்கு பரம்வீர் சக்ரா விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ள முதல்வர் பழனிசாமி, பாகிஸ்தானில் இருந்த தீவிரவாத முகாம்களை அழிக்க இந்திய விமானப்படை குண்டு வீசியது. அப்போது பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சேதமடைந்த இந்திய விமானத்திலிருந்து பாராசூட் மூலம் அபிநந்தன் குதித்து தப்பினார். ஆனால் அவர் பாகிஸ்தான் எல்லைக்குள் சிக்கி கொண்டார். பின்னர் அந்நாட்டு ராணுவத்தினரால் சிறைப்பிடிக்கப்பட்டார்.

எதிரிகளிடம் சிக்கினாலும் அஞ்சாமல் தைரியமாக பேசி நம் இந்திய நாட்டின் பெருமையை உயாத்தியவர் அபிநந்தன். அபிநந்தனின் துணிச்சல் மற்றும் தன்னம்பிக்கை நம் நாட்டு மக்களின் இதயங்களை வென்று விட்டது. மோசமான நிலையிலும் வீரத்தை வெளிப்படுத்தி இதயங்களை வென்ற அபிநந்தனுக்கு இந்திய ராணுவத்தின் உயரிய விருதான பரம்வீர் சக்ரா விருது வழங்க வேண்டும் என பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடு்த்துள்ளார்.

பாகிஸ்தான் பிடியில் இருந்த இந்திய விமானி அபிநந்தன் கடந்த வெள்ளியன்று விடுவிக்கப்பட்டு மாலை 5 மணியளவில் வாகா எல்லை வந்தடைந்தார். சுமார் 4 மணி நேர தாமதத்திற்கு பிறகு பாகிஸ்தான் அதிகாரிகள் அவரை இந்திய வெளியுறவு துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் இந்திய விமான படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். முன்னதாக புல்வாமாவில் கடந்த 14ம் தேதி நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்றது. இந்த அமைப்புக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகள் இந்தியா தரப்பில் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, கடந்த 26ம் தேதி ஜெய்ஷ் இ முகமது அமைப்பினர் பதுங்கியுள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்த தீவிரவாத முகாம் மீது இந்திய விமானப்படை குண்டு வீசி தாக்குதல் நடத்தியது.இதில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் போர் விமானத்தை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியது. அப்போது விரட்டிச் சென்ற இந்திய விமானத்தை பாகிஸ்தான் சுட்டது. அப்போது, விமானத்திலிருந்து பாராசூட் மூலம் தப்பிய இந்திய விமானி அபிநந்தன், பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்தார். அவரை பாகிஸ்தான் வீரர்கள் பிடித்து சிறைவைத்தனர்.

பாகிஸ்தானிடம் பிடிப்பட்ட வீரர் அபிநந்தனை இந்தியாவிற்கு திரும்ப அழைத்து வர உடனடியாக நடவடிக்கை எடுக்க பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், உறவினர்கள், அவரது கிராமத்தினர் வேண்டுகோள் விடுத்தனர். மத்திய அரசும் இந்த விவகாரம் தொடர்பாக சர்வதேச நடைமுறைகள் மற்றும் பாகிஸ்தான் நாட்டின் தூதரகத்திடம் அபிநந்தனை விடுவிப்பது தொடர்பாக வலியுறுத்தியது. இந்நிலையில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் அட்டாரி - வாகா எல்லையில் விமானி அபிநந்தன் இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார். இருநாட்டு ஊடகங்கள் மட்டுமின்றி சர்வதேச ஊடகங்களும் அங்கே முகாமிட்டு நேரடி ஒளிபரப்பு செய்தன. நாடு முழுவதும் அபிநந்தன் வருகை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Wing Commander ,Abhinanthan , Indian Air Force, Abhinandan, Param Vir Chakra, Chief Minister's Letter
× RELATED பாகிஸ்தான் சிறைபிடித்த சென்னை விமானி...