×

புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி நிதியுதவி: மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: புல்வாமா தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த மாதம் 14ம் தேதியன்று, ஜம்முவில் செயல்பட்டு வந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த(சிஆர்பிஎப்) 2500 வீரர்கள் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு 78 பஸ்களில் சென்று கொண்டிருந்தனர். புல்வாமா மாவட்டத்தில் ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் அவந்திபோரா அருகே வீரர்களின் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டிருந்தன. அப்போது ஒரு இடத்தில் மறைந்திருந்த தீவிரவாதி ஒருவன் வெடிகுண்டுகள் நிரப்பிய வாகனத்தை திடீரென வேகமாக ஓட்டி வந்து, வீரர்கள் சென்றுகொண்டிருந்த பஸ் மீது மோதி தாக்குதல் நடத்தினான். இதில் அந்த வாகனமும், பஸ்சும் வெடித்து சிதறியது.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த தாக்குதலில் பஸ்சில் இருந்த வீரர்கள் உடல் சிதறி பலியாகி விழுந்தனர். இந்த கொடூர தாக்குதலில் 40 மத்திய ரிசர்வ் படை வீரர்கள் உடல் சிதறி கோரமாக பலியாயினர். இதில் தமிழகத்தை சேர்ந்த 2 வீரர்களும் பலியாகினர். தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த பிப்ரவரி 26ம் தேதி இந்தியாவின் மிராஜ் 2000 என்ற 12 போர் விமானங்கள் பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மிகப்பெரிய முகாமை அழித்தது. இந்த நிலையில், உயிர்நீத்த ராணுவ வீரர்களின் மத்திய அரசு நிதியுதவி அறிவித்துள்ளது. அதில் ராணுவ வீரர்கள் உயிரிழந்ததால் மத்திய அரசு வழங்கும் நிதியில் ரூ.35 லட்சம் அவர்களது குடும்பத்திற்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆபத்துகள் பணிக்காக தொகை, காப்பீடு, வீரதீர செயல்களுக்கான நிதி ஆகியவற்றை சேர்த்து ரூ.1.01 கோடி வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : war heroes ,families ,government ,Pulwama ,announcement ,Central ,attack , Pulwama attack, soldiers, sponsored, federal government
× RELATED பத்தமடையில் இடிந்து காணப்படும்...