×

தனுஷ்கோடி தென்கடலில் ஆமை குஞ்சுகள் ‘அடைக்கலம்’

ராமேஸ்வரம் : தனுஷ்கோடி பகுதியில் நேற்று வனத்துறையினரால் கடல் ஆமை பொறிப்பகத்தில் இருந்த 96 ஆமை குஞ்சுகள் தென்கடலில் விடப்பட்டது. மன்னார் வளைகுடா கடல் பகுதியில் வாழும் அரிய வகை கடல் ஆமைகள், நள்ளிரவு கரையோர மணலில் நூற்றுக்கணக்கில் முட்டையிட்டு மீண்டும் கடலுக்குள் சென்று விடும். இந்த முட்டைகளை மன்னார் வளைகுடா கடல் வாழ் உயிரின காப்பக வனத்துறை அதிகாரிகள் பத்திரமாக மீட்டு குஞ்சு பொறிப்பகத்தில் வைத்து பாதுகாத்து வருகின்றனர். கடந்த ஜனவரி 14ம் தேதி துவங்கி, ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி, கீழக்கரை, தூத்துக்குடி கடலோர பகுதிகளில் மட்டும் கடந்த 50 நாட்களில், 12,089 கடல் ஆமை முட்டைகள் வனத்துறையினரால் மீட்கப்பட்டு, குஞ்சு பொறிப்பகங்களில் வைத்து பாதுகாக்கப்பட்டு வந்தது.

ஏற்கனவே தனுஷ்கோடி முகுந்தராயர்சத்திரம் பகுதி குஞ்சு பொறிப்பகத்தில் இருந்து, நூற்றுக்கும் மேற்பட்ட ஆமை குஞ்சுகள் தனுஷ்கோடி கடலில் விடப்பட்டன. நேற்றும் மன்னார் வளைகுடா வனத்துறை ரேஞ்சர் சதீஷ் தலைமையில் வனத்துறை ஊழியர்கள், முகுந்தராயர்சத்திரம் கடற்கரை குஞ்சு பொறிப்பகத்தில் இருந்த 96 ஆமை குஞ்சுகளை தனுஷ்கோடி தென்கடலில் விட்டனர். கடற்கரை மணலில் விடப்பட்ட குஞ்சுகள் கடலுக்குள் நீந்தி ஆழமான கடல் பகுதி நோக்கி சென்றன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Turtle Chicks 'Refuge ,Dhanushkodi South , Dhanushkodi South,Turtle ,Refuge
× RELATED தொடர் கடல் சீற்றத்தால் தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலாப்பயணிகளுக்கு தடை