×

புதிய ஊதிய ஒப்பந்த பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ; ஏ பிளஸ் பிரிவில் கோலி, ரோகித், பும்ரா; ஆண்டுக்கு ரூ.7 கோடி ஊதியம்

மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள புதிய ஊதிய ஒப்பந்த பட்டியலில் கேப்டன் விராட்கோலி, துணை கேப்டன் ரோகித் சர்மா, வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆகிய 3 பேர் மட்டுமே ஏ பிளஸ் பிரிவில் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.7 கோடி ஊதியமாக கிடைக்கும்.

அதே நேரத்தில் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி, அஸ்வின், ஜடேஜா, புவனேஸ்வர்குமார், புஜாரா, ரிஷப் பண்ட், ரகானே, ஷிகர் தவான், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, குல்தீப் யாதவ், ஆகியோர் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு ஆண்டு ஊதியமாக ரூ.5 கோடி கிடைக்கும்.

ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, தொடக்க வீரர் கே.எல்.ராகுல், வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ், சாஹல் ஆகியோர் பி பிரிவில் தங்கள் இடங்களை தக்க வைத்துக்கொண்டுள்ளனர். இவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.3 கோடி ஊதியமாக கிடைக்கும். சி பிரிவில் இடம் பெற்றுள்ள கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், அம்பத்தி ராயுடு, மனீஷ் பாண்டே, ஹனுமா விஹாரி, கலீல் அகமது, சாஹா உள்ளிட்ட 8 பேர் ரூ.1 கோடி ஊதியமாக பெறுவர்.

இதே போல் பெண்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதில் ஏ பிரிவில் மித்தாலி ராஜ், ஹர்மன் ப்ரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, புனம் யாதவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். பி பிரிவில் ஏக்தா பிஷட், ஜுலன் கோஸ்வாமி, ஷிகா பாண்டே, தீப்தி சர்மா, ரோட்ரியஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். சி பிரிவில் ராதா யாதவ், ஹேமலதா , அனுஜா பட்டில் உள்ளிட்ட 10 பேர் இடம் பெற்றுள்ளனர். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kohli ,Rohit ,BCCI ,Bumra ,A-Plus , BCCI, viratkoli, Rohit Sharma, Bumrah, Rishabh Pant, list of new wage contract
× RELATED சதம் விளாசினார் கோஹ்லி ஆர்சிபி 183 ரன் குவிப்பு