×

சத்தியமங்கலம் மலையில் மீண்டும் காட்டுத்தீ : ஏராளமான மரங்கள், புல்கள் சேதம்

ஈரோடு : சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. 1428 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட சத்தியமங்களம் புலிகள் காப்பக பகுதியில் மொத்தம் 7 வனச்சரகங்கள் உள்ளன. இதில் சத்தியமங்கலம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கம்பத்ராயன்கிரி மலை உச்சிப்பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. சத்தியமங்கலத்தை அடுத்துள்ள புளியங்கோம்பை கிராமத்தில் இருந்து தொடங்கும் இந்த கம்பத்ராயன்கிரி மலையில் நேற்று இரவு பற்றிய தீ அப்பகுதியில் அடுத்தடுத்து பரவி சுமார் 25 கி.மீ தொலைவு சுற்றளவிற்கு எரிந்துள்ளது. இந்த கம்பத்ராயன்கிரி மலை முழுவதும் புல் வகைகள் அதிகமாக காணப்படும் நிலையில், மலை பகுதியில் இருந்த ஊசி புல், கானம் புல் உள்ளிட்ட புல் வகைகள் காட்டுத்தீயில் எரிந்து நாசமாகியுள்ளது

மேலும் ஏராளமான மரங்களும் எரிந்து சேதமடைந்துள்ளன. தீயை அணைக்க வனத்துறையினர் போராடி வருகின்றனர். தீயை அணைக்கும் பணியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்களின் உதவியுடன் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். சுமார் 50க்கும் மேற்பட்டோர் தீயை அணைக்க முயற்சித்து வந்த நிலையில், பெரும்பாலான பகுதிகளில் தீ கட்டுக்குள் வந்துள்ளது. காட்டுத்தீயால் வனவிலங்குகளின் உயிர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்னும் சில மணி நேரங்களில் தீ முழுவதுமாக கட்டுக்குள் வந்துவிடும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த பிப்., மாதம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்ட நிலையில், தற்போது மீண்டும் தீ பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sathiyamangalam ,mountains ,sisters , Sathyamangalam Mountain, Wildfire, Trees
× RELATED உலகின் மிக வயதான ஒட்டிபிறந்த இரட்டை சகோதரிகள் மரணம்..!!