×

தாம்பரம்-நாகர்கோவிலுக்கு புது ரயில்: வாரத்தில் 3 நாட்கள் இயங்கும்,.. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை: தாம்பரம்- நாகர்கோவில் இடையே புதிய எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுவதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து தினசரி சென்னை செல்லும் பயணிகள் ரயிலில் இடம் கிடைக்காமல் அதிக அளவில் காத்திருப்போர் பட்டியலில் இருந்து வந்தனர். இந்த நிலையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நாகர்கோவிலில் இருந்து சென்னை செல்ல மேலும் அதிக இரவு நேரம் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க வலியுறுத்தி மத்திய அமைச்சர் பியூஸ் கோயலிடம் கோரிக்கை வைத்தார்.
இந்த கோரிக்கையை ஏற்று நாகர்கோவில், தாம்பரத்திற்கு இடையே வாரத்திற்கு மூன்று நாட்கள் இயங்கும் விரைவு ரயில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த விரைவு ரயிலானது தாம்பரத்தில் இருந்து(வ.எண்.22657) திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளில் இரவு 7.20 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் வழியாக மறுநாள் காலை 7.50 நிமிடத்திற்கு நாகர்கோவிலை வந்தடையும். மறுமார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து (வண்டி எண் 22658) செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் மாலை 5 மணிக்கு புறப்பட்டு வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சிர, விருதாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக மறுநாள் காலை 5.05 நிமிடத்திற்கு தாம்பரத்தை சென்றடையும். இந்த புதிய ரயிலை அறிவித்ததற்காக பிரதமர் மோடி, ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலுக்கும் நன்றியை தெரிவித்து கொண்டார். 8ம் ேததி(இன்று) விரைவு ரயிலை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மாலை 3 மணிக்கு கொடியசைத்து துவக்கி வைக்கிறார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Railway ,Ponnathirakrishnan ,Tambaram-Nagarkovil , Thambaram, Nagercoil, New Railway, Union Minister Ponnathirakrishnan
× RELATED சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே...