×

பேக்கேஜ் டெண்டர் முறை அரசாணையை ரத்து செய்யக்கோரி வழக்கு

மதுரை:பேக்கேஜ் டெண்டர் முறை தொடர்பான அரசாணையை  ரத்து செய்யக்கோரிய வழக்கில்,  பொதுப்பணித்துறை முதன்மை செயலர் பதிலளிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது. புதுக்கோட்டையை சேர்ந்த ஆர்.முத்துக்குமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் அரசுத்துறைகளில் பல்வேறு பணிகளுக்கு ஒரே டெண்டராக விடும் பேக்கேஜ் டெண்டர் முறையை அறிமுகம் செய்து, பொதுப்பணித்துறை 15.2.2019ல் அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த அரசாணையால் பல பணிகளுக்கு ஒரே டெண்டர் விடும்போது விதிக்கப்படும் நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் தகுதியுடன் தமிழகத்தில் சில ஒப்பந்ததாரர்கள் தான் உள்ளனர். இம்முறையால் அந்த சிலர் மட்டுமே பலன் பெறுவர். சிறு, சிறு பணிகளை டெண்டர் எடுத்து செய்து வரும் ஆயிரக்கணக்கான ஒப்பந்ததாரர்களும், அவர்களை நம்பியுள்ள தொழிலாளர்களும் பாதிக்கப்படுவர்.

பொதுப்பணித்துறையில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட பேக்கேஜ் டெண்டர் முறைைய ஐகோர்ட் ரத்து செய்தது. அப்போது பேக்கேஜ் டெண்டர் முறையை அமல்படுத்தமாட்டோம் என பொதுப்பணித்துறை சார்பில் உறுதியளிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் பேக்கேஜ் டெண்டர் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சிறு ஒப்பந்ததாரர்களுக்கு அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள தொழில் உரிமை பாதிக்கப்படும். இதனால் பேக்கேஜ் டெண்டர் முறை தொடர்பான அரசாணை செல்லாது என அறிவித்து ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மனு தொடர்பாக பொதுப்பணித்துறை முதன்மை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 20ம் தேதிக்கு  ஒத்திவைத்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : government , Package tender system, government
× RELATED “இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய...