×

பலத்த பாதுகாப்புடன் பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டிகள்

கராச்சி: தீவிரவாத தாக்குதல் காரணமாக உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் விளையாட இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பாகிஸ்தானில் நடைபெற உள்ளூர் டி20 கிரிக்கெட் போட்டிகள்  பலத்த பாதுகாப்புடன்  நடத்தப்பட உள்ளன. இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை போன்று பாகிஸ்தானிலுள் உள்ளூர் போட்டிகள் நடைபெறுகின்றன. பாகிஸ்தான் பிரிமீயர் லீக்(பிபிஎல்)  என்ற அந்த டி20 கிரிக்கெட் தொடரில் பெஷாவர், இஸ்லாமாபாத், கராச்சி, லாகூர், முல்தான், குவேட்டா என 6 அணிகள் பங்கேற்கின்றன. இந்த ஆண்டுக்கான லீக் போட்டிகள்  பாகிஸ்தானில் நடைபெறவில்லை. மாறாக பிப்.14ம் தேதி முதல் மார்ச் 5ம் ேததி வரை ஐக்கிய அரபு குடியரசு நாடுகளான துபாய், அபுதாபி, ஷார்ஜா ஆகிய நகரங்களில் நடைப்பெற்றன.எஞ்சிய 4 லீக் போட்டிகள், 3 தகுதிச் சுற்று போட்டிகள், ஒரு இறுதிப் போட்டி என 8 போட்டிகள் கராச்சி நகரில் நடைபெற உள்ளன. இந்தப் போட்டிகள் நாளை முதல்  மார்ச் 17ம் தேதி வரை நடக்கும்.

பல்வேறு அச்சுறுத்தல்கள் காரணமாக இந்தப் போட்டிகளின் போது எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க பாகிஸ்தான் அரசு பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கத்தின் கோரிக்கை காரணமாகவே போட்டி நடைபெறும் கராச்சி தேசிய விளையாட்டரங்கம் உள்ளே, வெளியேயும் ஆயுதம் தாங்கிய வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் வீரர்கள் தங்கியுள்ள ஓட்டல்களிலும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானை உலக  கோப்பை ேபாட்டியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று இந்தியா தரப்பில் வலியுறுத்தப்படுகிறது. அந்த கோரிக்கையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நிராகரித்து விட்டது. ஆனாலும் இந்தியா தனது கோரிக்கையில் இருந்து பின்வாங்கவில்லை. இந்நிலையில்தான் உள்ளூர் கிரிக்கெட் ேபாட்டிக்கு கூட ஆயுதப் படைகள் மூலம் பாதுகாப்பு தரும் அசாதரணமான சூழல் பாகிஸ்தானில் நிலவுவது வெளி உலகுக்கு தெரியவந்துள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pakistan , Cricket matches Pakistan ,strong security
× RELATED பயங்கரவாதம் சப்ளை செய்த பாகிஸ்தான்...