×

சையத் முஷ்டாக் அலி டி20 சூப்பர் லீக் போட்டி இன்று தொடக்கம்

இந்தூர்: நாட்டின் முக்கிய அணிகள் பங்கேற்கும் சையத் முஷ்டாக் அலி  டி20 கிரிக்கெட் போட்டியின் சூப்பர் லீக் சுற்று இன்று  தொடங்குகிறது. சையத் முஷ்டக் அலி கோப்பைக்கான நாட்டின் முதல்தர டி 20 கிரிக்கெட் போட்டியின் லீக் சுற்றுப் போட்டிகள்  பிப்.21ம் ேததி முதல் மார்ச் 2ம் தேதி வரை நடைப்பெற்றன. இதில் ஏ, பி, சி, டி, ஈ என 5 பிரிவுகளில் மொத்தம் தமிழ்நாடு, புதுச்சேரி, ஐதராபாத், சர்வீசஸ்,  அரியானா, கேரளா என மொத்தம் 37 அணிகள் விளையாடின. அதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடித்த தலா 2 அணிகள் சூப்பர் லீக் சுற்றுக்கு தகுதிப் பெற்றன.

இப்படி தகுதிப் பெற்ற 10 அணிகளும் ஏ, பி என 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் ஜார்க்கண்ட், குஜராத், ரயில்வே,  பெங்கால், மகாராஷ்டிரா அணிகளும், பி பிரிவில் டெல்லி, விதர்பா, மும்பை, கர்நாடகா, உத்ரபிரதேச அணிகளும் இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் அந்தப் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை விளையாட வேண்டும். இரண்டு பிரிவிலும் முதல் இடம் பிடிக்கும் அணி மார்ச் 14ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் விளையாடும். இன்று தொடங்கும் சூப்பர் லீக் சுற்று போட்டிகளில்  ஜார்க்கண்ட் -குஜராத்,  ரயில்வே-பெங்கால்,  டெல்லி - விதர்பா,  மும்பை - கர்நாடகா அணிகள் மோத உள்ளன. சூப்பர் லீக் சுற்றுப் போட்டிகள், இறுதிப் போட்டி அனைத்தும் இந்தூரில் நடைபெறும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Syed Mushtaq Ali T20 Super League ,Tournament , Syed Mushtaq Ali ,T20 Super League Tournament,starting today
× RELATED தேசிய ரோல்பால் போட்டிக்கு தமிழக வீரர்களை வாழ்த்தி அனுப்பும் நிகழ்ச்சி